உலகக்கோப்பை இறுதிப்போட்டி! பரபரப்பான அகமதாபாத்!

ஐ.சி.சி. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு அகமதாபாத்தில் ஓட்டல்களில் தங்கும் அறைகள் மற்றும் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஐ.சி.சி. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ம் தேதி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரின் லீக் போட்டிகள், காலிறுதி, அரையிறுதிப் போட்டிகள் முடிவடைந்து தற்போது இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. இந்தியா தான் விளையாடிய எந்த போட்டியிலும் தோல்வியை சந்திக்காமல் […]
மண்டல மகர விளக்குபூஜை: சபரிமலையில் இன்று நடை திறப்பு!

மண்டல மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் இன்று மாலை நடை திறக்கப்படுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை 1ம் தேதி முதல் தொடர்ந்து 60 நாட்களில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மண்டல மகர விளக்கு புஜையை முன்னிட்டு இன்று மாலை 5 மணியளவில் கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு […]
இந்தியா- நியூசிலாந்து அணி இன்று மோதல்! மும்பைக்கு சென்ற ரஜினிகாந்த்!

உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் ஆட்டத்தை பார்க்க நடிகர் ரஜினிகாந்த சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் முன்னர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார் என்பதை இன்று மதியம் 2 மணியளவில் நடைபெற உள்ள இந்தியா- நியூசிலாந்து அணிக்கு இடையிலான போட்டி முடிவு செய்யும் என்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். 13வது ஐ.சி.சி. […]
இறுதிப் போட்டிக்குள் நுழைவது யார்? இந்தியா& நியூசிலாந்து நாளை மோதல்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார் என்பதை நாளை நடைபெற உள்ள இந்தியா& நியூசிலாந்து அணிக்கு இடையிலான போட்டி முடிவு செய்யும் என்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். 13வது ஐ.சி.சி. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. 10 நாடுகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டித் தொடரின் லீக் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்தன. […]
Bye Bye பாகிஸ்தான்! சேவாக்கின் அசத்தல் பதிலடி!

இங்கே எல்லாமே டபுளாகத்தான் திரும்ப கிடைக்கும் என்று பாகிஸ்தான் இந்திய கிரிக்கெட் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் பதிலடி கொடுத்துள்ள சம்பவம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திரசேவாக் தனது கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் சமூகவலைதளங்களில் அதிரடி கருத்துகளை பதிவிட்டு டிரெண்டிங்கில் இருக்கிறார். இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இருந்து அரையிறுக்கு முன்னேறாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெளியேறியதை கிண்டல் செய்யும் வகையில் சேவாக் பதிவிட்ட […]
விராட் கோலி சுயநலவாதிதான்…. ஆனால்! வெங்கடேஷ் பிரசாத் சொல்வது என்ன?

தனது அணியின் வெற்றியை உறுதி செய்வதில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி சுயநலவாதியாக இருக்கிறார் என்று வெங்கடேஷ் பிரசாத் கூறி அவரை பெறுமைப்படுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நேற்று நடைபெற்ற இந்தியா& தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் டாஸ் வென்ற இந்திய முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 326 ரன்களை எடுத்தது. இதில் விராட் கோலி 101 ரன்களை எடுத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை […]
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி! புது தகவல்கள்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை சமன் செய்து சாதனை படைத்துள்ளார். 2023 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தரப்பட்டியலில் இருக்கும் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் விளையாடிய விராட் கோலி 119 பந்துகளில் 100 ரன்களை எட்டி 49வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். விராட் தனது […]
கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற வைஷாலி! யார் தெரியுமா?

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.வைஷாலி கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். நேற்று (நவ.5) நடைபெற்ற மகளிர் பிரிவில் 10வது சுற்றில் வைஷாலி சீனாவின் முன்னாள் வீராங்கனை மகளிர் உலக சாம்பியனான ஜோங்யி டானை எதிர்த்து விளையாடினார். 8 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்த வைஷாலி, ஜோங்யி டானை வீழ்த்தி அசத்தினார். மேலும் 2,498 ஈலோ லைவ் புள்ளிகளுடன் தொடர்ந்து களத்தில் இருந்த வைஷாலி, மேலும் 2 […]
டெல்லி காற்றுமாசு! உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை பாதிக்குமா? ஐ.சி.சி. ஆலோசனை!

டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளதை தொடர்ந்து டெல்லியில் வங்கதேசம் இலங்கை இடையிலான உலகக்கோப்பை தொடர் குறித்து நிபுணர்களிடம் ஐ.சி.சி. ஆலோசனை நடத்தி வருகிறது. உலகக்கோப்பை போட்டித் தொடருக்கான இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம்& இலங்கை அணிகள் மோதுகின்றன. டெல்லியில் நடைபெற உள்ள இந்த போட்டியில் பங்கேற்பதற்கான இருநாட்டு அணிகளும் டெல்லி வந்து சேர்ந்துள்ளனர். டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு அதிகரித்துள்ளதால் ஐ.சி.சி. வீரர்களின் நலன் குறித்து நிபுணர்களிடம் முக்கிய ஆலோசனை நடத்துகிறது. கடந்த சில வாரங்களாகவே டெல்லியில் […]
விராட் கோலிக்கு சர்பிரைஸ்! பெங்கால் கிரிக்கெட் வாரியம் திட்டம்!

வருகிற நவம்பர் மாதம் 5ம் தேதியன்று விராட் கோலியின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட பெங்கால் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா இமாலய வெற்றி பெற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட்கோலியின் பிறந்தநாள் வருகிற நவம்பர் மாதம் 5ம் என்பது அவரது ரசிகர்களுக்கு தெரியும். அதே நாளில் இந்திய& தென் ஆப்பிரிக்கா இடையிலான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. […]

