News

சீமான் மானம் காற்றில் பறக்குது. மீண்டும் விஜயலட்சுமி ருத்ரதாண்டவம்.

Follow Us

தனது அணியின் வெற்றியை உறுதி செய்வதில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி சுயநலவாதியாக இருக்கிறார் என்று வெங்கடேஷ் பிரசாத் கூறி அவரை பெறுமைப்படுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நேற்று நடைபெற்ற இந்தியா& தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் டாஸ் வென்ற இந்திய முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 326 ரன்களை எடுத்தது. இதில் விராட் கோலி 101 ரன்களை எடுத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்து அசத்தினார். அதிலும் குறிப்பாக விராட் கோலி தன்னுடைய பிறந்தநாளன்று இந்த சாதனையை புரிந்தது ரசிகர்களுக்கு போனசாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து விராட் கோலி மிகவும் சுயநலமாக தனது சாதனையை பதிவு செய்வதிலேயே குறியாக உள்ளார் என்று எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வெங்கடேஷ் பிரசாத் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘விராட் கோலி சுயநலத்துடன் சொந்த சாதனைகளுக்காக விளையாடுவதாக பேசப்படும் விவாதங்களை கேட்கவே வேடிக்கையாக இருக்கிறது. ஆம் விராட் கோலி சுயநலவாதிதான். ஒரு பில்லியன் மக்களின் கனவை பின்பற்றும் சுயநலம் அவரிடம் இருக்கிறது. இவ்வளவு சாதித்த பின்பும் கூட புதிய சாதனைகளை படைக்க வேண்டும் என்ற சுயநலம் அவரிடம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், தனது அணி வெற்றி பெறுவதை உறுதி செய்வதில் சுயநலமாக இருக்கிறார். ஆம் விராட் கோலி சுயநலவாதிதான்’’ என்று பதிவிட்டுள்ளது விராட் கோலியின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link