News

சீமான் மானம் காற்றில் பறக்குது. மீண்டும் விஜயலட்சுமி ருத்ரதாண்டவம்.

Follow Us


இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.வைஷாலி கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.


நேற்று (நவ.5) நடைபெற்ற மகளிர் பிரிவில் 10வது சுற்றில் வைஷாலி சீனாவின் முன்னாள் வீராங்கனை மகளிர் உலக சாம்பியனான ஜோங்யி டானை எதிர்த்து விளையாடினார். 8 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்த வைஷாலி, ஜோங்யி டானை வீழ்த்தி அசத்தினார்.


மேலும் 2,498 ஈலோ லைவ் புள்ளிகளுடன் தொடர்ந்து களத்தில் இருந்த வைஷாலி, மேலும் 2 புள்ளிகளை பெற்றால் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிச் சுற்றில் மங்கோலிய நாட்டு வீராங்கனையான பட்குயாக் முங்குந்துளை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.


மேலும் இறுதிப் போட்டி டிராவில் முடிந்த நிலையில் 8.5 பள்ளிகளை பெற்றிருந்த வைஷாலி தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் வைஷாலி மகளிருக்கான செஸ் கேன்டிடேட் தொடரில் விளையாட தேர்வாகியுள்ளார்.


இதையடுத்து கிராண்ட் மாஸ்டர்களான, உலகின் முதல் உடன்பிறந்தோர் என்ற மிகப்பெரிய சாதனையை வைஷாலியும், அவரது சகோதரரான பிரக்ஞானந்தாவும் படைத்துள்ளனர். இதில் பிரக்ஞானந்தா ஏற்கனவே கிராண்ட் மாஸ்டராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link