News

சீமான் மானம் காற்றில் பறக்குது. மீண்டும் விஜயலட்சுமி ருத்ரதாண்டவம்.

Follow Us

உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் ஆட்டத்தை பார்க்க நடிகர் ரஜினிகாந்த சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் முன்னர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார் என்பதை இன்று மதியம் 2 மணியளவில் நடைபெற உள்ள இந்தியா- நியூசிலாந்து அணிக்கு இடையிலான போட்டி முடிவு செய்யும் என்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

13வது ஐ.சி.சி. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. 10 நாடுகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டித் தொடரின் லீக் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று முடிவடைந்தன.

இந்தியா எதிர்க்கொண்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றி மட்டுமே கண்டு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதே போல் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

5 முதல் 10 இடங்களை முறையே பிடித்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து (நடப்பு சாம்பியன்), வங்காளதேசம், இலங்கை, நெதர்லாந்து ஆகியவை போட்டியில் இருந்து வெளியேறின.

அதன்படி இன்று (நவ.15) மதியம் 2 மணியளவில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும், நியூசிலாந்து அணிகளும் மோதுகின்றன. இப்போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா தலையிலான இந்திய அணி வீரர்கள் பட்டியலில் எந்த மாற்றமும்  இல்லை. லிக் போட்டிகளில் தோல்வியை காணாத இந்திய அணி, இன்றைய முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, சொந்த மண்ணில் தோற்றுவிடக் கூடாது என்ற எண்ணத்துடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா என்ற ஆர்வம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ‘தலைவர் 170’ படப்பிடிப்பை ஒத்தி வைத்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மும்பை வான்கடே மைதானத்திற்கு புறப்பட்டுள்ளார். மனைவி லதா ரஜினிகாந்துடன் அவர் சென்னை விமான நிலையம் சென்ற போது, ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு சென்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ‘‘படப்பிடிப்புக்காக செல்லவில்லை, மேட்சை பார்க்க செல்கிறேன்’’ என்று தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய்ஷா, நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து ‘கோல்டன் டிக்கெட்டை’ வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link