News

சீமான் மானம் காற்றில் பறக்குது. மீண்டும் விஜயலட்சுமி ருத்ரதாண்டவம்.

Follow Us

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை சமன் செய்து சாதனை படைத்துள்ளார்.


2023 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தரப்பட்டியலில் இருக்கும் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் விளையாடிய விராட் கோலி 119 பந்துகளில் 100 ரன்களை எட்டி 49வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். விராட் தனது பிறந்தநாளில் இந்த சாதனை படைத்துள்ளது ரசிகர்களுக்கு பர்த்டே டிரீட்டாக அமைந்தது.


ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை விராட் கோலி 79 சதங்களை அடித்துள்ளார்.


இந்த சாதனையை கவுரவிக்கும் வகையில் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘விராட் சிறப்பாக விளையாடினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் 49ல் இருந்து 50க்கு செல்ல எனக்கு 365 நாட்கள் தேவைப்பட்டது. அடுத்த சில நாட்களில் 49ல் இருந்து 50க்கு சென்று எனது சாதனையை முறியடிப்பீரகள் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link