News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தல தோனியின் ஜெர்சி நம்பர் 7க்கு ஓய்வு? புதிய தகவல்கள்!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.தோனியை கவுரவிக்கும் வகையில் அவர் பயன்படுத்தி வந்த ஜெர்சி எண் 7க்கு பி.சி.சி.ஐ. ஓய்வு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இந்திய கிரிக்கெட் அணியின் பொற்காலம் என்றால் அது எம்.எஸ்.தோனியின் தலைமையில் இயங்கிய போதுதான் என்று சொல்ல வேண்டும். தலைசிறந்த விக்கெட் கீப்பரான எம்.எஸ்.தோனியின் தலைமையிலான இந்திய அணி ஐ.சிசி.டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஷிப் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளது. மேலும் பல தொடர்களின் […]

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்! அமைச்சர் உதயநிதி ரூ.1.77 கோடி நிதி!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காக ரூ.1.77 கோடி நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போட்டியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கினார்.   தமிழக அரசு விளையாட்டுத்துறை மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மேலும் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி அவர்களை கவுரவப்படுத்தி வருகிறது. மேலும் விளையாட்டுத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து புதிய அறிவிப்புகளையும் தமிழக அரசு […]

சிக்ஸர் சிங்கிற்கு ஜே போடுங்க…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளில் இன்னொரு பிரபலமும் பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவர்தான், ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்து அசத்திய யுவராஜ் சிங். 2007ம் ஆண்டு செப்டம்பர் 19. இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்குமான டி20 கிரிக்கெட் போட்டி நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய இந்தியா 16வது ஓவரில் தடுமாறிக் கொண்டிருந்தது. நம்பிக்கை நாயகன் தோனியும் அன்று அவ்வளவு சிறப்பாய் ஆடவில்லை. அந்த இக்கட்டான நேரத்தில்தான், யுவராஜ் சிங் களத்தில் இறங்கினார். அன்று யுவராஜ் […]

உலகக்கோப்பை அவமதிப்பு! ஆஸ்திரேலிய வீரர் மீது வழக்குப்பதிவு!

உலகக்கோப்பை மீது கால் வைத்து அவமதித்த ஆஸ்திரேலிய வீரரான மிட்செல் மார்ஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 19ம் தேதி நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய & ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இந்தியா 10 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களை எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 241 ரன்களை எடுத்து உலகக்கோப்பையை தட்டிச் சென்றது. இந்திய ரசிகர்களை கிரிக்கெட் மைதானத்தில் […]

இந்திய கிரிக்கெட் அணிக்கு பலமாக முழு நாடே உள்ளது! சோயிப் அக்தர் பாராட்டு!

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையிலும் அந்நாட்டு பிரதமர் மோடி வீரர்களுக்கு ஆறுதல் கூறிய சம்பவத்தை பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் பாராட்டியுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி, தன்னை எதிர்த்து விளையாடி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்த துக்கத்தை தாங்க முடியாத கேப்டன் ரோகித் சர்மா, முகமது சிராஜ் மற்றும் விராட் கோலி ஆகிய வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதனர். இதில் விராட் […]

டி20 தொடர்! இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்!

இந்திய அணிக்கு எதிராக 5  போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததை இன்றளவும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திவைத்துள்ளது. எப்படியும் சொந்த மண்ணில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி உலகக்கோப்பையை தட்டிச் சென்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அடுத்ததாக இந்திய அணிக்கு எதிராக […]

உலகக்கோப்பை மீது கால்களை வைத்து அவமதித்த மிட்செல் மார்ஷ்!

உலகக்கோப்பையின் மீது கால்களை வைத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கண்டனங்களை பெற்றதுடன் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 13வது உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 241ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அபாரமாக விளையாடி 6வது முறையாக உலகக்கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை தட்டிச் சென்றது. ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முன்னரே  கூறியது போல், கிரிக்கெட் […]

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை புகழ்ந்த பேட் கம்மின்ஸ்!

இந்திய அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு அபாரமாக இருந்தது என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.   13&வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (நவ.19) அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.   இந்திய அணி 10 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்த நிலையில் 241 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய […]

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி! விராட் கோலிக்கு அனுஷ்கா ஆறுதல்!

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் போராடி தோல்வியடைந்த நிலையில் துவண்டு போன கணவர் விராட் கோலியை மனைவி அனுஷ்கா கட்டியணைத்து ஆறுதல் கூறிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (நவ.19) அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்திய & ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சுப்மன் கில், கேப்டன் […]

1.3 லட்சம் ரசிகர்களுக்காக இதை செய்வோம்! பேட் கம்மின்ஸ்!

நாளை மைதானத்தில் கூடும் 1.3 லட்சம் ரசிகர்களை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு என்று ஆஸ்திலேரிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.   நாளை மதியம் 2 மணியளவில்  அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில்  உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. ஐ.சி.சி. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ம் தேதி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரின் லீக் போட்டிகள், காலிறுதி, அரையிறுதிப் போட்டிகள் […]