News

சீமான் மானம் காற்றில் பறக்குது. மீண்டும் விஜயலட்சுமி ருத்ரதாண்டவம்.

Follow Us

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையிலும் அந்நாட்டு பிரதமர் மோடி வீரர்களுக்கு ஆறுதல் கூறிய சம்பவத்தை பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் பாராட்டியுள்ளார்.


உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி, தன்னை எதிர்த்து விளையாடி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்த துக்கத்தை தாங்க முடியாத கேப்டன் ரோகித் சர்மா, முகமது சிராஜ் மற்றும் விராட் கோலி ஆகிய வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதனர். இதில் விராட் கோலியை அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா கட்டியணைத்து ஆறுதல் கூறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.


இந்நிலையில் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது பிரதமர் மோடி, தோல்வியில் துவண்டு போயிருந்த கிரிக்கெட் வீரர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இது ஒரு நல்ல மெசேஜ். தோல்வியாக இருந்தாலும் வெற்றியாக இருந்தாலும் நாங்கள் வீரர்களுடன் இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஒட்டு மொத்த நாடுமே இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னால் இருப்பதாக சோயிப் அக்தர் பாராட்டியுள்ளார்.


இதற்கிடையில் வீரர்களின் ஓய்வறைக்குள் பிரதமர் மோடி, கேமராக்களுடன் நுழைந்தது அவர்களின் பிரைவெசியை கெடுத்துள்ளதாக பலர் டிரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையிலும் விளம்பரம் தேவையா என்றும்? அந்த நேரத்தில் ரோகித்சர்மா மற்றும் விராட் கோலியின் முகங்களின் சங்கடம் தெளிவாக தெரிந்ததும் என்றும் நெட்டீசன்கள் கமெண்டுகளால் வறுத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link