News

சீமான் மானம் காற்றில் பறக்குது. மீண்டும் விஜயலட்சுமி ருத்ரதாண்டவம்.

Follow Us

Share via:

0 Shares

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காக ரூ.1.77 கோடி நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போட்டியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கினார்.

 

தமிழக அரசு விளையாட்டுத்துறை மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மேலும் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி அவர்களை கவுரவப்படுத்தி வருகிறது. மேலும் விளையாட்டுத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து புதிய அறிவிப்புகளையும் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

 

அதன் ஒருபடியாக சென்னை லீலா பேலசிஸ் வருகிற வருகிற 15ம் தேதி முதல் (நாளை மறுநாள்) வருகிற 21ம் தேதி வரையில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் &2023 போட்டி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசின் ரூ.1.77 கோடிக்கான காசோலையை அமைச்சர உதயநிதி ஸ்டாலின், போட்டியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Share via
Copy link