News

சீமான் மானம் காற்றில் பறக்குது. மீண்டும் விஜயலட்சுமி ருத்ரதாண்டவம்.

Follow Us

உலகக்கோப்பை மீது கால் வைத்து அவமதித்த ஆஸ்திரேலிய வீரரான மிட்செல் மார்ஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த 19ம் தேதி நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய & ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இந்தியா 10 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களை எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 241 ரன்களை எடுத்து உலகக்கோப்பையை தட்டிச் சென்றது. இந்திய ரசிகர்களை கிரிக்கெட் மைதானத்தில் அமைதிப்படுத்துவதே என் இலக்கு என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் சொன்னது போலவே இந்திய அணி தோற்றதும் முழு அரங்கமே மயான அமைதியாய் காட்சியளித்தது.


இதைத்தொடர்ந்து 6வது முறையாக ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பையை வெற்றி பெற்று வீரர்கள் அனைவரும் உலகக்கோப்பையுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.


இவர்களில் ஒருபடி மேலே சென்ற ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், உலகக்கோப்பை மீது தனது இரண்டு கால்களை வைத்து நாற்காலியில் சாய்ந்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இதை பார்த்து கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனமுடைந்து போய், உலகக்கோப்பைக்கு அவமரியாதை நடந்துவிட்டதாக கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.


இந்நிலையில் மிட்செல் மார்ஷ் மீது உத்தரபிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்த ஆர்.டி.ஐ. ஆர்வலர் பண்டிட் கேசவ் என்பவர் புகார் அளித்துள்ளார். அதன்படி மிட்செல் மார்ஷ் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது செயல் இந்திய வீரர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக அதில் குற்றம் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் மிட்செல் மார்ஷ் இந்தயாவில் கிரிக்கெட் விளையாடுவது தடுக்குமாறும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.


இதற்கிடையில் இந்திய வீரர் ஷமி சொந்த ஊர் திரும்பிய போது, உலகக்கோப்பை அவமதிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. உலகில் உள்ள அனைத்து அணிகளும் போராடும் ஒரு டிராபிக்கு, மிட்செல் மார்ஷ் செய்த இந்த செயல் மகிழ்ச்சி அளிக்கவில்லை. காயத்தைதான் ஏற்படுத்தியுள்ளது’’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link