News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநில முன்னாள் முதல்-வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியில் இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு 118 கோடி ரூபாய் சட்டவிரோதமாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,  நந்தியாலா என்ற பகுதியில் நேற்று நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் சந்திரபாபு பங்கேற்க சென்றார். அதன் பின்னர் இரவு நேரத்தில் தனது வாகனத்திலேயே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அதிகாலை சுமார் 3 மணியளவில் நந்தியாலா போலீஸ் டிஐஜி தலைமையிலான போலீசார் சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய முயற்சி செய்த போது, அங்குகூடியிருந்த தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் போலீசாரை தடுத்தனர்.

சந்திரபாபு நாயுடு ஏற்கனவேஎஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவின் பாதுகாப்பில் உள்ளதால் அவரை சட்டப்படி அதிகாலை 5.30 மணிவரை அவரை அழைத்து செல்ல முடியாது என்று எஸ்பிஜி படைப்பிரிவினரும் மறுப்பு தெரிவித்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட போலீசார், காலை 6 மணிவரை காத்திருந்து அதன் பின்னர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்து விஜயவாடாவுக்கு அழைத்து சென்றனர். ஆந்திர முன்னாள் முதல்-வர் சந்திரபாபு நாயுடு அதிகாலை நேரத்தில் போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திர மாநில அரசியல் களத்தில் பெரும் சலசலப்பையும் அதிர்ச்சியையும் ஏற்டுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link