Share via:
நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பல ஆண்டுகளாக புகைந்து கொண்டிருக்கும் விஜயலட்சுமி& சீமான் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து காவல்நிலையத்தை நாடியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக நடிகை விஜயலட்சுமி நேற்று மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்ட நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இன்று காலை நேரில் ஆஜராக போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சீமான் தற்போது வெளியூர் செல்ல இருப்பதால் வருகிற 12ம் தேதி நேரில் ஆஜராவார் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.