News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பேரிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சீபுரத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார்.

 

தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கோகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் உரிமைத் தொகைத் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

 

காஞ்சீபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில் அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக காஞ்சீபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு திருவிழாக்கோலம் பூண்டுள்ள காஞ்சீபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link