Share via:
பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காஞ்சீபுரத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
அப்போது நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின், மகளிர் முன்பு உரை நிகழ்த்தினார். அவர் பேசும் போது, என்னுடைய பாதி என சொல்லும் அளவுக்கு எனது மனைவி துர்கா உள்ளார். அரசியல் பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த துர்கா, திருமணமான 5வது மாதத்தில் நான் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்ட போது திகைத்து போனார்.
அதன்பின்னர் அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்பதை புரிந்து கொண்டு எனக்கு பக்கத்துணையாக நின்றார் என்று தெரிவித்தார். மேலும் என்னுடைய மனைவி அதாவது முதலமைச்சரின் மனைவி என்று எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் காட்டிக் கொள்ளக் கூடாது என்பதிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.
மேலும் பெண்கள் அனைவரும் ஆண்களுக்கு நிகராகவும், அதற்கு மேலாகவும் உழைக்க வேண்டும் என்று உற்சாகப்படுத்தினார்.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பெண்கள் வரவுள்ள முகாம்களில் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது நீங்களும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயனடைவீர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துக் கொண்டார்.