எல்லோருக்கும் வந்தாச்சு ஆயிரம் ரூபாய்… திமுக தில்லுமுல்லு அம்பலம்

மகளிர் உரிமைத்தொகை வழங்குவதில் குளறுபடி என்று நாளிதழ் செய்தி வெளியிட்டதன் அடிப்படையில் திமுகவினர் பொங்கியெழுந்து கண்டனம் தெரிவித்தனர். திமுகவினர் இதுகுறித்து, ‘’2026 தேர்தல் பிரச்சாரத்தின் போது, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கப்படும் என த.வெ.க வாக்குறுதி அளித்தது. ஆனால் இன்று, அந்த 2,500 ரூபாய் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதோடு மட்டுமல்லாமல், கடந்த மூன்று மாதங்களாக 1,000 உதவித்தொகை பெறும் பெண்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து குறைத்து, இத்திட்டத்தையே படிப்படியாக முடக்கும் முயற்சியில் […]
ஆன்லைன் சி.எஸ்.ஆர்., கொலைகள் குறைவு. டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி

தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் (e-CSR) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்குச் செல்லாமல் ஆன்லைனில் புகார் அளிக்கலாம் என்றும் அதற்கு இ.சி.எஸ்.ஆர். வழங்கப்படும் என்று சென்னை காவல்துறை தலைமை இயக்குநரும், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் தலைமைப் பொறுப்பு அதிகாரியுமான டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அறிவித்துள்ளார். மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் டிஜிபி முன்னிலையில் இந்தப் புதிய வசதியை திறந்துவைத்த டிஜிபி மகேஷ் குமார், ‘’இனி, பொதுமக்கள் தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.police.tn.gov.in […]
நிதியோடு வரவேண்டும்… அமைச்சர்களுக்கு விஜய் உத்தரவு

சோனியாகாந்தி புத்தக விழாவில் கலந்துகொள்வதற்கு முதல்வர் விஜய் டெல்லி சென்ற சமயத்தில் அவருடன் அமைச்சர்கள் ஆதவ், ராஜ்மோகன், வினோத் ஆகியோரும் சென்றனர். விஜய் சென்னைக்குத் திரும்பிய பிறகும் அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இதுகுறித்து விசாரிக்கையில், ‘’வரும் 2027-28 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்னும் 3 மாதங்களில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் துறை சார்ந்த தேவைகளை மத்திய அரசிடம் கேட்டு பெற வேண்டும் ’’ என்று முதல்வர் விஜய் கூறியதால் அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு மத்திய அமைச்சர்களை சந்தித்துவருகிறார்கள். […]
எல்லா பெண்களுக்கும் அண்ணன் சீர் ப்ளீஸ்… விஜய்க்கு ரசிகைகள் கோரிக்கை

விஜய் கொடுக்கும் ஒரு பவுன் தங்க நாணயம், பட்டுச்சேலையை வாங்கவேண்டும் என்ற ஆசை தமிழ்நாட்டில் அத்தனை பெண்களுக்கும் இருக்கிறது. அண்ணன் சீர் வாங்குவதற்காகவே திருமணம் முடிப்பதற்குப் பெண்கள் தயாராகிறார்கள். இந்நிலையில் அண்ணன் சீர் பெறுவதற்கு வெளியாகியிருக்கும் தகுதி அறிவிப்பு பெண்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. எனவே, திருமணம் முடிக்கும் அத்தனை பெண்களுக்கும் சீர் கொடுங்கள் அண்ணா விஜய் என்று கோரிக்கை வைக்கிறார்கள். அண்ணன் சீர் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிடப்பட்டு […]
சென்னையில் ஒலிம்பிக் சிட்டி… விளையாட்டுக்கு விஜய் சியர் அப்

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லவேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவு. ஆனால், அதற்குரிய மைதானங்கள், பயிற்சி மையங்கள், தேர்ச்சிபெற்ற பயிற்சியாளர்கள் நம்மிடையே இல்லை என்பதுதான் மிகப்பெரும் குறை. இந்த நிலையில், வரும் 2036 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா விண்ணப்பித்துள்ளது. அப்படி இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், தமிழ்நாடு பதக்கம் வாங்குவதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று விஜய் தலைமையிலான தவெக அரசு முடிவு செய்துள்ளது. இதனை அடிப்படையாக வைத்தே தொலைநோக்குப் பார்வையில் […]
நீதிபதியின் பரிகார காமெடி. வெளுத்துவாங்கும் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம்

பெரியார் அறிவுலக மோசடி விவகாரம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதியின் விமர்சனம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில், தாமரை பிரதர்ஸ் மீடியா சார்பில் வெளியிட்ட, ‘மகா பெரியவா’ புத்தக வெளியீட்டு விழாவில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசினார். அப்போது அவர், ‘’கடந்த இரண்டு நாட்களாக அடைந்த வேதனையை வெளியில் சொல்ல முடியாது. 2024ல் நீதிபதி மகாதேவனுடன் இணைந்து தீர்ப்பு ஒன்றை வழங்கினேன். நுாலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடப்பதாக 2019ல் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அவ்வழக்கின் விசாரணை 2024ல் […]
டெல்லியில் அம்பலமான திமுக ஏஐ போலி புத்தக ஊழல்… தவெக அதிரடி

DMK’s ‘AI-generated fake book’ scam exposed in Delhi… TVK takes swift action
விஜய்க்கு ஆன்மிகம். திமுகவுக்கு ஆபாசம். திருச்செந்தூர் அரோகரா சர்ச்சை

விஜய் முதல்வரான காலத்தில் இருந்து இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து கூறிவருகிறார். எல்லோரையும் சமமாக மதித்துவருகிறார். இந்த நிலையில், திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் சூரசம்ஹாரம் நிகழ்வின் போது, அரசு சார்பில் வர்ணனை செய்தோர் மற்றும் பாடல் பாடிய தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்டோர் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுடன் இன்றைய முதல்வரை ஒப்பிட்டு பேசிய விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியது. இந்துக்கள் இந்த விஷயத்தில் […]
பா.ஜ.க.வை பதறவைக்கும் டெல்லி புத்தக விழா… விஜய்க்கு ஸ்பெஷல் ரெஸ்பெக்ட்

ஆளும் பாஜகவை பதறவைக்கும் அளவுக்கு டெல்லியில் சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா நடந்துமுடிந்திருக்கிறது. இண்டியா கூட்டணி போன்று அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து அன்புடன் சோனியாவுக்கு மரியாதை செய்திருக்கிறார்கள். ராகுல்காந்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் அவர் பேசுகையில், ‘’என் தாயார் சோனியா காந்தியை அறிய விரும்பினால், ஒருமுறை என் பார்வையில் இருந்து அவர்களை பாருங்கள். அவர்களின் தைரியம், அவர்களின் உணர்வுபூர்வமான தன்மை மற்றும் எல்லா சிரமங்களுக்கிடையிலும் வாழ்க்கையை அன்புடன் கட்டமைத்தார். இதுவே என் அம்மா. இன்று […]
ஆதவ் அர்ஜூனாவுக்கு டெய்சி முற்றுப்புள்ளி. அரசியல் மோதல்..?

டெல்லியில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர்களை சந்தித்துவரும் நேரஹ்தில், விவாகரத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அவரது மனைவி டெய்சி மார்ட்டின். தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை காதலித்து திருமணம் முடித்தவர் அவரது மனைவி டெய்சி மார்ட்டின். இவர் லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதவ் அர்ஜூனா விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, 2026 தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் வென்று தற்போது பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக […]

