News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

விஜய் முதல்வரான காலத்தில் இருந்து இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து கூறிவருகிறார். எல்லோரையும் சமமாக மதித்துவருகிறார்.

இந்த நிலையில், திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் சூரசம்ஹாரம் நிகழ்வின் போது, அரசு சார்பில் வர்ணனை செய்தோர் மற்றும் பாடல் பாடிய தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்டோர் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுடன் இன்றைய முதல்வரை ஒப்பிட்டு பேசிய விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்துக்கள் இந்த விஷயத்தில் அமைதி காக்கும்போது கடவுள் இல்லை என்று சொல்லும் திமுக இதில் அரசியல் செய்யப்பார்க்கிறது. இந்த விவகாரம் குறித்து திமுக, ‘’அதிகாரம் கண்ணை மறைக்கலாம். ஆனால், விரதம் இருந்து, நடந்தே கோவிலுக்கு வந்த லட்சக்கணக்கானோர் முன்னிலையில் ‘விஜய்யை போல முருகன் வேல் எடுத்தார்’ என்று மநம்பிக்கையை சிறுமைப்படுத்துவது ஏற்றுக் கொள்ளத்தக்கதா?

பக்தியும், கடவுள் நம்பிக்கையும் அவரவர் தனிநபர் விருப்பம் – உரிமை என்பதுதான் பேரறிஞர் நமக்குக் கற்றுக் கொடுத்த பாடம். ஆட்சியதிகாரத்தின் அகந்தையில் நானே கடவுள் என்ற ஆணவம் திக்குத் தெரியாமல் கொண்டு போய் நிறுத்தும்! இப்படியெல்லாம் யார் உத்தரவிடுகிறார்கள் என்ற விளக்கத்தைத் தந்து முதலமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தது.

இதற்கு பதிலடியாக திமுகவை கிழிகிழ்யென வகுந்தெடுத்திருக்கிறது தவெகவின் ஐடி விங். ’’திமுகவின் ஆபாச வரலாற்றைக் கட்டுமரக் கதைகளால் மற(றை)க்க முனையும் Senior Generational Abuser அவர்களே! “ஆபாசக் குடும்ப யூனிட்டின்” வரலாற்றைக் கட்டுமரக் காலத்திலிருந்தே தொடங்குவோமா? திராவிட நாடு எங்கே? எனக் கேட்டால் பாவாடை நாடாவைப் பற்றிப் பேசிய மஞ்சள் துண்டு தந்தையின் வாரிசே! சட்டமன்றத்தில் பெண் ஆளுமையின் புடவையை இழுத்த கேடுகெட்ட வரலாற்றை இன்னும் தமிழ்நாட்டுப் பெண்கள் மறக்கவில்லை.

 “அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்” என்ற கம்பரின் வரிகளைத் தனது கேடுகெட்ட எண்ணத்தால் பெண் ஆளுமையை இழிவுபடுத்தப் பயன்படுத்திய Senior Generational Abuser-ஏ! மிசாவில் கைதானது எதற்கென்று கூறாமல் இன்றுவரை Detention Copy-ஐக் கண்ணில் காட்ட மறுப்பது ஏன் என்று கூற வக்கிருக்கிறதா? நடுச்சாமத்தில் சாலையில் யாரையோ விரட்டினீர்கள் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்களே, அதை மறுத்து ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிடுங்களேன், Sweet Uncle!

பெண்கள் நிறைந்திருக்கும் சபையில் “ஒரே கல்லுல ரெண்டு மாங்கா இல்ல, பல மாங்காவை அடிச்சுட்டாரு” என்று பேசிய கேடுகெட்ட வரலாற்றைக் கொண்ட Dummy Daddy-யின் வாரிசு ரீப்போஸ்ட்நிதி, ஆபாசப் பேச்சில் தந்தையையே விஞ்சிய தனயன்தான்! “விட்டா காலுக்கு அடியில் புகுந்துருப்பாரு”, “அங்க தண்ணி வரணும்”, “Mood” என்று எப்போதும் பேச்சும் எண்ணமும் ஆபாசமாகவே இருக்கும் நடுச்சாமத்தில் Insta-வில் நேரம் செலவிடும் ரீப்போஸ்ட்நிதிக்கு! இதில் Generational Abuser-களை வேறு பொறைபோட்டு வளர்க்கின்றனர் Senior Generational Abuser-ம் ரீப்போஸ்ட்நிதியும்!

 

எப்போதும் பெண்களை இயல்பாகவே இழிவுபடுத்தும் ஆபாசக் குடும்ப யூனிட், அரசியல் ரீதியாகப் பேசவோ மோதவோ வக்கற்றுப்போகும் போதெல்லாம் ஆபாசத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள். பெண்களை மதிக்கத் தெரியாத, அவர்களின் சுயமரியாதையைச் சீண்டும் கட்சிதான் ஆபாச குடும்ப யூனிட்! ஆபாசத்தை ஆயுதமாகக் கொண்டு இனியும் பிழைக்கலாம் என்று எண்ணினால், ஆபாச ஆபாசக் குடும்ப யூனிட்டின் ஆபாசங்கள் அம்பலப்படுத்தப்படும்’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link