Share via:
விஜய் கொடுக்கும் ஒரு பவுன் தங்க நாணயம், பட்டுச்சேலையை வாங்கவேண்டும்
என்ற ஆசை தமிழ்நாட்டில் அத்தனை பெண்களுக்கும் இருக்கிறது. அண்ணன் சீர் வாங்குவதற்காகவே
திருமணம் முடிப்பதற்குப் பெண்கள் தயாராகிறார்கள்.
இந்நிலையில் அண்ணன் சீர் பெறுவதற்கு வெளியாகியிருக்கும் தகுதி
அறிவிப்பு பெண்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. எனவே, திருமணம் முடிக்கும்
அத்தனை பெண்களுக்கும் சீர் கொடுங்கள் அண்ணா விஜய் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
அண்ணன் சீர் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிடப்பட்டு இதற்காக 812 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெறத் தகுதியுள்ள பயனாளிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உரிய நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின்படி அண்ணன் சீர் பெறுவதர்கு ஆன்லைன் அல்லது இசேவை
மையம் மூலமே விண்ணப்பிக்க முடியும். திருமணத்திற்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து, திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
5.10.2026 முதல் 15.1.2027 வரை நடைபெறும் திருமணங்களுக்கு 15.1.2027 தேதி வரை
விண்ணப்பிக்கலாம். திருமணத்தின் போது மணமக்கள் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட திருமண வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். மணப்பெண் குடும்ப ஆண்டு வருமானம் 2.5 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட குடும்ப அட்டையில் மணமகளின் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும். அப்ளை செய்த அனைவருக்கும் தனித்துவமான விண்ணப்ப எண் வழங்கப்படுவதுடன், விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படும். திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
ஒரு பெண்ணின் திருமணம் என்பது ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியும், புதிய வாழ்க்கையின் தொடக்கமும் ஆகும். அந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழகத்தின் பெண்ணுக்கும் அண்ணனாக இருந்து சீர் வழங்குகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மணப்பெண் குடும்பத்துக்கு ஆண்டு வருமானம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால், நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும்
மாதம் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் சம்பளம் வாங்குபவர்களாக உள்ளனர். அவர்கள் யாரும் இதில்
விண்ணப்பிக்க முடியாமல் போகிறது.
அண்ணன் சீர் என்பது தங்கத்துக்காக இல்லை என்றாலும் விஜய் மீதான
அங்கீகாரமாக, பாசமாக தங்களிடம் இருக்கவேண்டும் என்று அத்தனை பெண் பிள்ளைகளும் ஆசைப்படுகிறார்கள்.
எனவே, எல்லோருக்கும் இதை கொடுக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
ரசிகைகள், பெண்களின் நியாயமான ஆசையை விஜய் நிறைவேற்றுவார் என்றே
நம்புவோம்.

