சட்டசபையில் எடப்பாடி ராக்ஸ்… சபாநாயகர் ஷாக்

இன்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆளும் கட்சிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார். எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? என்று அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியதும் எடப்பாடி பழனிசாமி கொதித்து எழுந்துவிட்டார். ‘’நடந்தது தெரியாமல் பேசக்கூடாது. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை புரிந்துகொண்டு பேசவேண்டும். ஒரு கட்சியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் சேருவதா? எங்களோடு இருந்தவர்கள் திடீரென எப்படி வேறு […]
விஜய்யை பாராட்ட வரும் பரந்தூர் மக்கள்… கையகப்படுத்தப்பட்ட நிலம் என்னாகும்..?

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி புதிய பசுமை வழி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக சட்டப்பேரவையில் நேற்று 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு ஏகனாபுரம் கிராம மக்கள், போராட்டக் குழுவினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர். மேலும் ஏகனாபுரம் பிரதான சாலைக்கு முதல்வரின் பெயரைச் சூட்ட கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதோடு இன்று முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து அரசிடம் […]
திருமா, கம்யூனிஸ்ட்களுக்கு விஜய் நெத்தியடி. டோண்ட் கேர் அரசியல்

விஜய் கட்சியுடன் கூட்டணி என்று திருமாவளவன் கொடுத்த அறிவிப்புக்கு தவெகவில் மிகப்பெரும் வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார். அடுத்த நாள் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து இதுகுறித்து விளக்கமும் கொடுத்தார். ஆனால், விடுதலைசிறுத்தைகள் அறிவிப்பை விஜய் கொஞ்சமும் கண்டுகொள்ளவே இல்லை. விஜய் மட்டுமின்றி அவரது கட்சியினரும் திருமா அறிவிப்பை மதிக்கவே இல்லை. அதனால், இந்த நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பு தேவையில்லாமல் வெளியிட்டதாக வருத்தப்படுகிறார். அதேபோன்று கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோரிக்கை, போராட்டங்களையும் விஜய் கொஞ்சமும் கண்டுகொள்ளவே இல்லை. […]
விஜய் அமைச்சருக்கு கனிமொழி ஆதரவு.. உதயநிதிக்கு நேரடி எதிர்ப்பு

அமைச்சர் கீர்த்தனா உடையைக் கிண்டல் செய்து, ஆபாச வார்த்தைகளை பேசியும் திமுகவினர் சோஷ்சியல் மீடியாவில் வைரலாக்கிவருகிறார்கள். உதயநிதியை வைத்துக்கொண்டே திமுக எம்.எல்.ஏ. இந்த விவகாரத்தைப் பேசியதும் வைரலாகியது. இந்த நிலையில் கீர்த்தனாவுக்கு ஆதரவாக கனிமொழி இன்று ஒரு பதிவு போட்டுள்ளார். இது நேரடியாக உதயநிதிக்கு எதிரான அறைகூவல் என்கிறார்கள். அந்த பதிவில் கனிமொழி, ‘’காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் […]
விஜய் ஹாட்ரிக் சிக்ஸர்…. பரந்தூர், சிலிண்டர், மகளிர் பயணத்தில் தரமான சம்பவம்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில் இன்று நகராட்சி நிர்வாகம் – செய்தித்துறை, தமிழ் வளர்ச்சி, பள்ளிக் கல்வி, உயர்கல்வித்துறை தொடர்பான விவாதம் நடைபெறுகிறது. இன்றைய தினம் முதல்வர் விஜய், ‘’மீனம்பாக்கம் விமானம் நிலையம் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாள்கிறது. தொழில் வளர்ச்சிக்கும் சரக்கு போக்குவரத்துக்கும் இன்னொரு விமானம் நிலையம் தேவை. விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் இன்னொரு விமானநிலையத்துக்கான இடம் எடுக்கப்பட வேண்டும். ஆனால், முந்தைய அரசு பரந்தூர் – ஏகனாபுரத்தில் விவசாய நிலங்களை அழித்து விமான […]
பன்னீருக்கு பலமான பதவி…? விஸ்வாசத்திற்கு ஸ்டாலின் பரிசு

திமுகவில், கட்சி மாறி வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், உடனியாக மாநிலப் பதவி கிடையாது என்ற கட்டுப்பாட்டை பன்னீருக்காக ஸ்டாலின் மீறப்போவதாக பேச்சு எழுந்துள்ளது. ஏனென்றால், முதல்வர் விஜய் வரும் போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்த நிற்க வேண்டும் என்ற குரல் எழுந்த போதும், எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது அமைச்சர்கள் அடிக்கடி குறுக்கிடும் போதும், சட்டமன்றத்தின் விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு மாறாக நடைபெறும் எந்தவொரு விவாதத்தின் போதும் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவான வாதங்களை […]
அடுத்த பிரதமர் விஜய்..? காங்கிரஸை மிரட்டும் பாஜக

சமீபத்தில் அமித்ஷாவை விஜய் சந்தித்துப் பேசியதிலிருந்து காங்கிரஸ் கட்சியினர் அனலில் போட்ட புழுவாக துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய சி.எம். நாளைய பி.எம். என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி சொன்ன கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர் ரியாக்ஷன் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ராகுல் காந்தியே அடுத்த பிரதமர் என்று முதன்முதலாக பேசியவர் மு.க.ஸ்டாலின். ஆனால், திமுகவை கழற்றிவிட்டு தவெக வண்டியில் ஏறிவிட்டார் ராகுல் காந்தி. இந்த நிலையில், முதல்வர் நிலையிலிருந்து பிரதமர் விஜய் என்று அவரது அமைச்சர்களே […]
ஸ்டாலின் புதிய கட்டுப்பாடுகள். கனிமொழி போர்க்கொடி?

திமுக நிர்வாகக் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சும் வகையிலும், இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் பல்வேறு மாற்றங்கள் செயற்குழுவில் நடந்துள்ளன. இதில், தனக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று கனிமொழி அப்செட் ஆகியிருப்பது ஹைலைட் ஆகியுள்ளது. செயற்குழு தீர்மானத்தின் படி திமுக மாவட்டச் செயலாளருக்கு வயது வரம்பு – 70, ஒருவர் இரண்டு முறை மட்டுமே மாவட்டச் செயலாளராக இருக்க முடியும், ஒன்றியச் செயலாளர்களுக்கு வயது வரம்பு 60, கிளைச் செயலாளர்களுக்க வயது வரம்பு 45, மாநகரச் […]
சிங்கப்பெண் அதிரடிப்படை அசத்தல் ரிகார்டு. 3 குழந்தைகள் மீட்பு

முதல்வர் விஜய் அறிமுகப்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப்படை, பெண்களுக்கு பாதுகாப்பு கவசமாகத் திகழ்கிறது. இந்நிலையில் கடந்த 14 முதல் 20 வரை மேற்கொண்ட நடவடிக்கைகள் தெரியவந்துள்ளன. தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை. கடந்த ஒரு வாரத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் மாவட்ட களப்பிரிவுகள் 272 புகார் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, 20 குற்றவழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தன. மேலும், காணாமல் போன […]
தாய்மாமன் மோதிரம் ஒப்பந்தம் ஓவர். கேர்ஃபுல் விஜய்

தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதன்படி, ‘தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்காக’ தங்கம் வழங்கும் நிறுவனங்களாக ஜோயாலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி வைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக 1 லட்சத்து 28,499 குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக 2 நிறுவனங்களுக்கு ஒப்பந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ’தவெக அரசின், தாய்மாமன் தங்க […]

