News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

வழக்கமாக மதுரையில்தான் சினிமா நடிகர், நடிகையருக்கு ரசிகர் மன்றம், பேரவை தொடங்கப்படுவது வழக்கம். இப்போது அருவாள் சண்டைக்குப் பேர் போன திருநெல்வேலியில், திரிஷாவுக்கு பேரவை தொடங்கப்பட்டுள்ளது.

இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அமைப்பின் மாநில பொதுச் செயலாளராக ராஜகோபால் இருக்கிறார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேரவையின் லோகவை அவர் வெளியிட்டார்.

நடிகை திரிஷாவிற்கு ஆதரவாகவும், அவரது பெயரில் நற்பணிகளை முன்னெடுக்கும் நோக்கிலும் இந்தப் பேரவை தொடங்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதை தொடங்கியிருக்கும் ராஜகோபால் ஒரு தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த லோகோவில், பதவிக்காக அல்ல தமிழக மக்களின் உரிமைக்காக என வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த அமைப்பு திரிஷாவின் அனுமதியோடு தொடங்கப்பட்டதா என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. வெறுமனே கவனம் ஈர்ப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது என்றால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டியது முக்கியம். இல்லையென்றால், இதேபோல் தமிழகம் முழுக்க தொடங்கப்படும் வாய்ப்பு உண்டு.

இந்த விவகாரத்தை நாம் தமிழர் கட்சியினர் கையிலெடுத்து கிண்டல் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். வரும் தேர்தலில் தவெகவுக்கும் திரிஷா பேரவைக்கும் கூட்டணி அமையுமா என்று கேட்கிறார்கள்.

புடுச்சி உள்ளே போடுங்க போலீஸ்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link