News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

மூன்று மாஜிக்களுக்கு குறி..? விஜய் சட்டமன்றத்தில் நேரடி எச்சரிக்கை

இன்று சட்டமன்றத்தில் திமுகவினரை பார்த்து, ‘மூன்று துறை தொடர்பான ஃபைல்கள் டேபிளில் உள்ளன. அவற்றை திறக்க வைத்துவிடாதீர்கள்’’ என்று எச்சரிக்கும் தொனியில் பேசியிருக்கிறார். இன்று சட்டமன்றட்தில் பேசிய விஜய், ‘’மூன்று துறை தொடர்பான ஃபைல்கள் என்னுடைய டேபிளில் இருக்கிறது. அத்தணையும் ஆதாரங்களுடன் இருக்கிறது.. அதனை ஒப்பன் பண்ண வைத்துவிடாதீர்கள். எதை எப்போது ஒப்பன் பண்ணணுமோ அது அப்போது ஒப்பன் ஆகும்” என சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். செந்தில்பாலாஜி, நேரு, சேகர்பாபு ஆகிய மூன்று பேரையே விஜய் சுட்டிக் காட்டுகிறார் […]

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கெட் அவுட்…? விஜய் குஜிலிமஸ்து ஆக்‌ஷன்

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் குறித்த விவரங்களை சில மணி நேரங்களில் திரட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும் என்று குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது என்ன தடை செய்யப்பட்ட இயக்கமா என்று தவெகவுக்கு அதிமுக கேள்வி எழுப்பியிருக்கிறது. இதுகுறித்து அதிமுக ஐ.டி.விங், ‘’திண்டுக்கல் மாவட்டத்தின் குஜிலியம்பாறை தாலுகாவில் கம்யூனிஸ்ட் […]

பால், கார், இன்சூரன்ஸ், நர்ஸ். அள்ளித்தரும் வள்ளல் விஜய் அறிவிப்பு

இன்று சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பால் கொள்முதல் விலை உயர்வு மருத்துவ காப்பீடு வரம்பு அதிகரிப்பு திருநங்கைகளுக்கான சிகிச்சை சிறப்பு அறிவிப்பு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் மற்றும் உதவியாளர் வசதி அறிவிப்பு ராஜாஜி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் இடங்கள் உருவாக்கம் என ஒரே நாளில் அடுத்தடுத்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் பாராட்டையும் ஈர்த்திருக்கிறார் முதல்வர் விஜய் முதலமைச்சர் ஜோசப் விஜய், பால் […]

மீண்டும் மீண்டும் ரெய்டு. திமுகவில் இருந்து விலகுகிறார் செந்தில்பாலாஜி..?

கடந்த ஆட்சியில் செந்தில்பாலாஜி மீது பாஜக தொடர் நடவடிக்கை மேற்கொண்டுசிறையில் தள்ளியது. அதேபோன்று இப்போது தவெக அரசு தொடர்ந்து செந்தில்பாலாஜி மீது அதிரடிநடவடிக்கைகள் எடுத்துவருகிறது. டாஸ்மாக் தொடங்கி அவர் வகித்த மின்சாரத்துறை வரையிலும் பல்வேறுவிவகாரங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று தமிழகம் முழுவதும் 40 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுவருகிறது. சென்னை பெருங்குடியில் 4 இடங்கள், அண்ணா நகரில்3 இடங்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு என லஞ்ச ஒழிப்புத்துறை […]

பஸ் கண்டக்டராக வடமாநில தொழிலாளர்கள்..? விஜய்க்குத் தெரியுமா?

முதல்வர் விஜய்க்குத் தெரியாமல் இந்த ஆட்சியில் எதுவும் நடப்பதில்லை என்று அமைச்சர்கள் நெஞ்சை நிமிர்த்தி பேசுகிறார்கள். ஆனால், போக்குவரத்துத் துறையில் வடமாநில தொழிலாளர்கள் பணி நியமனம் செய்யப்படுவதாக வரும் தகவல் அவருக்குத் தெரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 1800 நடத்துநர் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதற்கு உத்திரப்பிரதேச நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள தவெக அரசைக் கண்டித்து, இன்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்துவருகிறார்கள். ஏனென்றால், வட மாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ் தெரியாது. ஓரளவு தமிழ் தெரியும் […]

விஜய் சல்யூட்டுக்கு பயந்துட்டீங்களா ஸ்டாலின்..? முரசொலி அக்கப்போர்

விஜய் ஆட்சியின் 100 நாள் சாதனைகள் மற்றும் சுதந்திர தின நாள் கொண்டாட்டத்திற்கு திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி, கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, விஜய்யின் அதிரடி அரசியலை ஸ்டாலினால் தாக்குப்பிடிக்க முடியாமல் தனிமனித தாக்குதல் மற்றும் நடிகை விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளதுள்ளார் என்று தவெகவினர் கிண்டல் செய்கிறார்கள். முரசொலி தலையங்கத்தில், ‘’சுதந்­திர தினத்­தன்று கொடி ஏற்­றிய முத­ல­மைச்­சர் விஜய்­யின் மானம் காற்­றில் பறந்­தது. வெட்­கமோ, கூச்­சமோ இல்­லா­மல் ஒரு நடிகையை முன்­வ­ரி­சை­யில் உட்­கார வைத்து, இரு­வ­ரும் […]

டி.கே.சிவகுமாரை தட்டிக் கேட்பாரா விஜய்..? காவிரி, தமிழர் படுகொலை

கர்நாடக வனத்துறையினர் 3 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம் மற்றும் காவிரி நீர் பிரச்னை குறித்தும் சென்னைக்கு வரும் கர்நாடக முதல்வருடன் நேரில் எதிர்ப்பு தெரிவிப்பாரா விஜய் என்ற கேள்வி எழுந்துள்ளது. சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் ஹன்னூர் காட்டில் மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூன்று தமிழர்கள் கர்நாடக வனத்துறை காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேநேரம், காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்றவர்களை வனத்துறை காவலர்கள் சுட்டுவிட்டதாக தமிழர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதுகுறித்து கர்நாடக முதல்வரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, […]

திருமாவின் அடிதடி மாநாடு. திமுகவுக்கு சிறுத்தைகள் குட்பை

விடுதலை சிறுத்தைகள் புதிய இயக்கம் அல்ல, நிறைய கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தியவர்கள். ஆனால், தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை ஒழுங்காக திட்டமிடாத காரணத்தால் கட்டுக்கடங்காத கூட்டம் காட்டுமிராண்டித்தனமாக மாறியது. வேறு வழியில்லாமல் தொண்டர்களை கட்டுப்படுத்த திருமாவே களத்தில் இறங்கி அடித்து, தள்ளவேண்டி இருந்தது. ஒரு கூட்டத்தை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணமாக விசிக தேசிய எழுச்சி மாநாட்டைக் கூறலாம் எனும் அளவுக்கு ஆகிவிட்டது. இதுகுறித்து பேசும் விசிகவினர், ‘’நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான கூட்டம் அதாவது ஏறக்குறைய […]

விஜய் 100 நாள் ஆட்சி. ஸ்பெஷல் வீடியோ. தமிழகத்தின் பொற்காலம்

நாட்டில் ஊழல் ஒழியாதா? அரசு அதிகாரிகள் மக்களுக்குப் பயப்படமட்டார்களா ? நேர்மையான நிர்வாகம் கிடைக்காதா என்பது காலம் காலமாக தமிழக மக்கள் எதிர்பார்த்த மாற்றம். அந்த மாற்றங்களை எதிர்பார்த்த மக்களுக்கு விடையாக வந்தார் விஜய். தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களை நிறைவு செய்துள்ளது; மக்களின் நாடித் துடிப்பை அறிந்து புதிய சிந்தனைகளுடன் பல திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் புகழ்ந்துள்ளார். லஞ்சம் கேட்டால் கொடுக்கதீங்க என்று சொன்ன முதல் முதல்வர் […]

உதயநிதி கைக்குப் போகும் திமுக..? கட்சி சீரமைப்புத் திட்டங்கள்

எதிர்பாராத தோல்வியினால் துவண்டு போயிருக்கும் திமுகவுக்கு உற்சாகம் தரும் வகையில் உட்கட்சித் தேர்தல் மற்றும் சீரமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டச் செய்லாளர்கள் எண்ணிக்கை நூறுக்கும் மேல் உயர்த்தப்பட உள்ளது. இதில், உதயநிதி ஆதரவாளர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்பதால் சீனியர்கள் அலறுகிறார்கள். இதுகுறித்துப் பேசும் திமுகவினர், ‘’விரைவில் திமுக செயற்குழு குழுவை கூட்ட திட்டமிட்டுள்ளது திமுக தலைமை. இதில் 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அலங்காரப் பதவிகள் மட்டுமே இருக்கும். சென்னையில் பகுதி செயலாளர்கள், பிற மாவட்டங்களில் […]