Share via:
டெல்லியில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர்களை சந்தித்துவரும் நேரஹ்தில், விவாகரத்து அறிவிப்பு
வெளியிட்டுள்ளார் அவரது மனைவி டெய்சி மார்ட்டின்.
தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை காதலித்து திருமணம் முடித்தவர்
அவரது மனைவி டெய்சி மார்ட்டின். இவர் லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மகள் என்பது
குறிப்பிடத்தக்கது. ஆதவ் அர்ஜூனா விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து,
2026 தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் வென்று தற்போது பொதுப்பணி மற்றும் விளையாட்டு
மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கிறார். இவர்கள் இருவரும் 14 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப்
பிறகு பரஸ்பரமாக பிரிந்து தனித்தனி பாதைகளில் செல்ல முடிவெடுத்துள்ளனர்.
டெய்சி தனது அறிக்கையில் கூறியது: “14 ஆண்டுகள் நண்பர்களாக, வாழ்க்கைத்
துணைகளாக, பெற்றோர்களாக கடந்து வந்தோம். இன்று பரஸ்பர உடன்பாட்டுடன் பிரிகிறோம். ஆனால்
எங்கள் குழந்தையை இணைந்து வளர்ப்பதும், அதன் மகிழ்ச்சியும் எப்போதும் எங்கள் முதல்
முன்னுரிமை.” அவர் ஆதவ் மீது மரியாதை வைத்திருப்பதாகவும், புதிய பயணத்திற்கு வாழ்த்துகிறதாகவும்,
தனிமைக்கு மதிப்பு கொடுக்குமாறும் கேட்டுள்ளார். கசப்பு இல்லாத பிரிவு. குழந்தைக்கு
முன்னுரிமை. இதுவே முக்கியம்’’ என்று கூறியிருக்கிறார்.
இந்த பிரிவுக்குப் பின்னே டெல்லி அரசியல் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அம்மா லீமா ரோஸ் வழியில் டெய்சியும் ஒரு அரசியல்
கட்சியில் இணைவார் என்றும் சொல்லப்படுகிறது. இதில் ஏற்பட்ட மோதலே பிரிவுக்குக் காரணம்
என்று கூறப்படுகிறது.

