News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

சோனியாகாந்தி புத்தக விழாவில் கலந்துகொள்வதற்கு முதல்வர் விஜய் டெல்லி சென்ற சமயத்தில் அவருடன் அமைச்சர்கள் ஆதவ், ராஜ்மோகன், வினோத் ஆகியோரும் சென்றனர். விஜய் சென்னைக்குத் திரும்பிய பிறகும் அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

இதுகுறித்து விசாரிக்கையில், ‘’வரும் 2027-28 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்னும் 3 மாதங்களில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் துறை சார்ந்த தேவைகளை மத்திய அரசிடம் கேட்டு பெற வேண்டும் ’’ என்று முதல்வர் விஜய் கூறியதால் அமைச்சர்கள்  டெல்லியில் முகாமிட்டு மத்திய அமைச்சர்களை சந்தித்துவருகிறார்கள்.

அந்த வகையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, புது தில்லியில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவாலை நேரில் சந்தித்தார். பல்வேறு திட்டங்களுக்காக நிதி உதவி கோரப்பட்டது.

அப்போது, ராமேஸ்வரம் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே சர்வதேச பயணிகள் படகு சேவைகளைத் தொடங்குவதற்கும் 118 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கடலூர் பசுமைவெளி ஆழ்கடல் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு 4 ஆயிரத்து 700 கோடி ரூபாயும், சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் படகுத் தளங்களைக் கட்டுவதற்கும், சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே பயணிகள் படகு சேவைகளைத் தொடங்குவதற்கும் 900 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேட்டுக் கொண்டார்

அதேபோல் டெல்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை அமைச்சர் ராஜ்மோகன் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியாக மத்திய அரசு வழங்க வேண்டிய ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இன்றைய தினமும் மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசி நிதி தொடர்பான கோரிக்கை வைத்துப் பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. நல்லதே நடக்கட்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link