News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

சிம்பு, தனுஷ்,. விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு! தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால் அதர்வா ஆகிய 4 பேருக்கு ரெட் கார்டு விதிக்கப்படுகிறது. சென்னையில் நேற்று (செப்.13) திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா ஆகிய 4 நடிகர்களுக்கும் ரெட் கார்டு விதிக்கப்படுகிறது. நடிகர் சிம்பு மீது […]

நடிகர் விஜய், பெற்றோருடன் திடீர் சந்திப்பு! யாரும் சொல்லாத உண்மை தகவல்!

நடிகர் விஜய் தனது பெற்றோருடன் இணக்கமாக இல்லை என்று பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டிய நிலையில் தற்போது விஜய் தனது பெற்றோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நடிகர் விஜய் லியோ திரைப்படப் பணிகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் ரீலீசுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் கட்சிப்பணி என விஜய் பம்பரமாக சுற்றி வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய நடிகர் விஜய், நேற்று தனது பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபாவை […]

மலேசியாவை அதிர வைத்த ‘ஜெயிலர்’ வசூல் சாதனை!

உலகளவில் வசூல் சாதனை புரிந்து வரும் ஜெயிலர் திரைப்படம் தற்போது மலேசியாவில் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக மலேசியாவில் ஜெயிலர் திரைப்படத்தை வெளியிட்ட ஐங்கரன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.   ஜெயிலர் திரைப்படம் இயக்குனர் நெல்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருக்கு அடுத்த மைல் கல் என்றே சொல்ல வேண்டும். கடந்த ஆகஸ்டு மாதம் 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் ஓடிடி யில் வெளியான பின்னரும் இன்றும் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.   […]

கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் அசோக் செல்வன்! புகைப்படங்கள் வைரல்

திருநெல்வேலியில் நடிகர் அசோக் செல்வன்& கீர்த்தி பாண்டியன் காதல் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. 90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் நடிகரான அருண்குமாரின் 3வது மகளான கீர்த்தி பாண்டியனும், நடிகர் அசோக் செல்வனும் காதலித்து வருவதாக கிசுகிசு பரவிக் கொண்டிருந்தது. அதைத்தொடர்ந்து விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற தகவலும் வெளியானது. அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியனும் ‘ப்ளூ ஸ்டார்’ என்ற திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த போது இவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் […]

விஷாலுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது! மார்க் ஆண்டனி வெளியிட தடை நீங்கியது!

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியிட இருந்த தடை நீங்கியுள்ளது.   நடிகர் விஷால், எஸ்.சூர்யா நடிப்பில் டைம் டிராவல் கதைக்களத்துடன் தயாராகியுள்ள படம் மார்க் ஆண்டனி. தொடர்ந்து விஷாலின் படங்கள் தோல்வியடைந்த நிலையில் அவரின் முழுநம்பிக்கையாக இருப்பது மார்க் ஆண்டனி படம்தான்.   இதன் டிரெய்லர் வெளியாகி ரகிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக சில்க் ஸ்மிதா நடிப்பது போன்ற காட்சிகள் அமைந்துள்ளதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை […]

‘‘தலைவர் 171’’ திரைப்படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது திரைப்படத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த ஆகஸ்டு மாதம் 10ம் தேதி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் உலகளவில் வசூல் சாதனை புரிந்து வருகிறது. மேலும் பொன்னியின் செல்வன்&2, விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களின் மொத்த வசூலையும் முறியடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகும் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையிடப்பட்டு […]

நானே பலி ஆடு ஆகிறேன்’- ஏ.ஆர்.ரகுமான் உருக்கம்!

மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரி விவகாரம் தொடர்பாக வரும் காலங்களில் இது போன்று அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க நானே பலி ஆடு ஆகிறேன் என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இன்ஸ்டாவில் பதிவு வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரி என்றால் ரசிகர்களுக்கு தீபாவளிதான். அந்த வகையில் பல்வேறு நகரங்களில் இசைக்கச்சேரி நடத்திய ஏ.ஆர்.ரகுமான் கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் போதாத காலம் மழை பெய்ததால் இசைக் கச்சேரியை ஒத்தி வைக்கிறேன். […]

வசூலில் புதிய சாதனை படைத்த ‘ஜவான்’ திரைப்படம்!

நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் வெளியான 5  நாட்களுக்குள் 525 கோடி ரூபாய் அளவுக்கு வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோலிவுட் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மெண்ட் வழங்க, கவுரி கான் தயாரிப்பில் கடந்த 7ம் தேதி வெளியான திரைப்படம் ஜவான். நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே ஜவான் படத்தில் தங்கள் நடிப்பு திறமையை வெளிக்காட்டியிருந்தனர். ஜவான் […]

பந்தாடப்பட்ட ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள்! மன்னிப்பு கேட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்!

மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சிக்காக டிக்கெட் வாங்கி குவிந்த ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள், அலைக்கழிக்கப்பட்டதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து திரைப்படங்களில் இசையமைத்து வந்தாலும், தனது ரசிகர்களுக்காக அடிக்கடி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதன் மூலம் வரும் பணத்தையும் பல்வேறு நற்காரியங்களுக்காக செலவிட்டு வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் நன்மதிப்பை உருவாக்கியுள்ளது. அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற இருந்த ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி, தொடர் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. […]

முதல் முறையாக சூர்யாவுக்கு ஜோடியாகும் நஸ்ரியா! ரசிகர்கள் கொண்டாட்டம்!

தேசிய விருது பெற்ற இயக்குனர் சுதா கொங்ராவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக சூர்யா 43வது படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதார் என்று தெரிகிறது. பெயரிடப்படாத இத்திரைப்படத்தை தேசிய விருது பெற்ற பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ளதாக ஏற்கனவே […]