Share via:
தேசிய விருது பெற்ற இயக்குனர் சுதா கொங்ராவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக சூர்யா 43வது படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதார் என்று தெரிகிறது.
பெயரிடப்படாத இத்திரைப்படத்தை தேசிய விருது பெற்ற பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ளதாக ஏற்கனவே தெரிய வந்துள்ள நிலையில் கதாநாயகி குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. அதன்படி முதல்முறையாக நடிகையும், வில்லன் நடிகர்பகத் பாசிலின் மனைவியுமான நடிகை நஸ்ரியா நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும் இத்திரைப்படத்தின் மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் நடிகை அதிதி சங்கர் கதாநாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் நஸ்ரியாவின் பெயர் அடிபட்டுள்ளதால், இவருக்கு பதில் இவரா? அல்லது இரண்டு கதாநாயகியா என்ற கேள்வியை தற்போது ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்னரே உண்மை நிலவரம் தெரிய வரும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.