தொடர்ந்து 12 மணி நேரம் எஸ்.பி.பி. பாடல்கள்! ஏசியா புக் உலக சாதனை!

ஏசியா புக் உலக சாதனைக்காக தொடர்ந்து 12 மணிநேரம் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்களை பாடும் நிகழ்ச்சி சென்னையில் தொடங்கியது. மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரையிலும் அவர் பாடிய பாடல்களை ஒரு முறையாவது கேட்டு விடாத பாடிவிடாத மனிதர்களே இருக்க முடியாது. இந்நிலையில் மறைந்த எஸ்பி பாலசுப்ரமணியம் நினைவாக ஏசியா புக் உலக சாதனைக்காக அவர் பாடிய பாடல்களை தொடர்ந்து 12 […]
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பார்வையிட்ட தமன்னா குஷ்பு!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை தமன்னா, குஷ்பு உள்ளிட்ட நடிகைகள் பார்வையிட்டு மெய்சிலிர்த்து போன சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்த மே மாதம் திறக்கப்பட்டது. இருப்பினும் மழைக்கால கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல்நாள் அலுவல்கள் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும் அடுத்தடுத்த நாள் சிறப்புக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற […]
அக்கினேனி நாகேஸ்வர ராவின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

இந்திய நடிகர் நாகேஸ்வர ராவின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அக்கினேனி குடும்பத்தினர் மற்ற பிரபலங்கள் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் குவிந்ததால் அவ்விடமே விழாக்கோலம் பூண்டது. தென்னிந்திய நடிகர்களில் முக்கியமானவர் அக்கினேனி நாகேஸ்வரராவ் 255க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2014ம் ஆண்டு காலமான நாகேஸ்வரராவின் மகன், அவரது மகன் என திரைத்துறையில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். மேலும் தென்னிந்திய நடிகர்களில் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இக்குடும்பம் முதல் இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து நாகேஸ்வரராவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு […]
பிரபல தயாரிப்பாளரை மணக்கும் திரிஷா! வெளிவந்த ரகசிய தகவல்கள்!

தமிழ் திரையுலகில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவரின் இளமை மாறாத தோற்றம் 40 வயதை தாண்டியும் இவரை கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இருக்க செய்துள்ளது. ஆரம்ப காலத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த திரிஷா இடையில் இருக்கும் இடமே தெரியாமல் இருந்தார். அதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தை தொடர்ந்து தற்போது கோலிவுட்டில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது நடிகை திரிஷா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜயுடன் […]
ரஜினிகாந்த் – பி.சி.சி.ஐ. செயலாளர் திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி இதோ!

உலகக்கோப்பை 2023ம் ஆண்டுக்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து வழங்கினார். 13வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரை காண கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். ஏற்கனவே 8வது முறையாக ஆசியக் கோப்பை தொடரின் […]
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை! வெளியான காரணம்!

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் இன்று அதிகாலை திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டிஷ்யூம், காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், அங்காடித் தெரு உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து விஜய் ஆண்டனி மற்ற இசையமைப்பாளர்களுக்கு கடும் போட்டியாளராக இருந்து வருகிறார். இசையமைப்பதோடு சேர்த்து காளி, நான், சைத்தான், சலீம், பிச்சைக்காரன்1, பிச்சைக்காரன்2, கொலை உள்ளிட்ட பல்வேறு படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்து தன்னை ஒரு கதாநாயகனாகவும் அடையாளப்படுத்திக் கொண்டார். விஜய் […]
5 விருதுகளை தட்டிச் சென்ற விக்ரம் திரைப்படம்! சைமா விருதுகள் 2023

துபாயில் நடைபெற்ற சைமா 2023 விருது வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படத்துறை சார்பாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் அதிக விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.ஃ கடந்த 2012ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வரும் சைமா விருதுகள் திரையுலகத்தினரின் பெரிய கனவு என்றே சொல வேண்டும். கடந்த ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற சைமா விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு துபாயில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. […]
ஏ.வி.எம். அருங்காட்சியகத்தை அலங்கரித்த அஜித் பைக்!

ஏ.வி.எம். அருங்காட்சியகத்தில் நடிகர் அஜித் திருப்பதி திரைப்படத்தில் பயன்படுத்திய பைக்கை இருப்பது கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகிறார்கள். தமிழ் சினிமாவுக்கு முகவரி என்று சொல்லும் அளவுக்கு பல்வேறு சாதனைகளை புரிந்த ஏ.வி.எம்.நிறுவனம் தொடங்கப்பட்ட 1945ம் ஆண்டு முதல் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி.ராமாராவ், ஜெயலலிதா உள்ளிட்ட 5 முதலமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. தமிழ் மொழி மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மலையாளம் என கடந்த 77 வருடங்களில் 178 திரைப்படங்களை தயாரித்துள்ளது. இருப்பினும் ஏ.வி.எம். […]
இணையத்தை கலக்கும் ‘லியோ’ விநாயகர்! ரசிகர்கள் உற்சாகம்!

சென்னையில் உள்ள மார்க்கெட்டுகளில் தற்போது நடிகர் விஜய்யின் ‘லியோ’ உருவத்தில் விநாயகர் சிலைகள் அமோக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் (18ம் தேதி) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. வெவ்வேறு உருவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். பெரியளவு முதல் சாதாரண அளவு வரையிலான பிள்ளையார் சிலைகளை ஆர்வமுடன் பக்தர்கள் கவனிப்பது வழக்கம். அந்தவகையில் புஷ்பா, பாகுபலி என சினிமா கதாபாத்திரங்களையும் மையமாக வைத்து விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டது. […]
காஸ்மெட்டிக் பிசினசில் தடம்பதிக்கும் நயன்தாரா! வைரல் போட்டோஸ்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பல்வேறு தொழில்களை செய்து வரும் போதிலும், சமூக வலைதளங்களில் தலைகாட்டுவதில் பொதுவாக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால்தற்போது இன்ஸ்டாகிராமில் முதல் முறையாக தனது இரட்டை ஆண் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிட்டு இணையத்தை தெறிக்கவிட்டார். அதோடு சேர்த்து தனது இன்ஸ்டா பக்கத்தில் Self Love Starts சூன் என்று பதிவு வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டினார். அந்தவகையில் தற்போது 9SKIN என்ற பெயரில் காஸ்மெட்டிக் நிறுவனம் ஒன்றை […]

