News

வன்னியரசு, ஷாஜகான் பதவியேற்பு. விஜய்க்கு புதிய கூட்டணி ரெடி.

Follow Us

திருமாவின் பிளாக்மெயில் அரசியல். துணைமுதல்வர் பேராசை

விஜய் நேரடியாக துணை முதல்வர் பதவி தருவதற்கு உறுதி கொடுத்தபிறகே கூட்டணியில் சேர்ந்திருக்கிறார் திருமாவளவன். ஒரே நேரத்தில் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய் ஆகியோருக்கு சிக்னல் கொடுத்து நிஜ பிளாக்மெயிலர் ஆகியிருக்கிறார் திருமாவளவன்.   இதுகுறித்து நாம் தமிழர் கட்சியினர், ‘’இப்போதுவரை அதிமுகவோடு இருக்கிறது பாஜக. அந்த அதிமுகவின் தயவில் முதல்வரானால், திருமாவுக்கு அது ஒவ்வாமையாக இருக்காது; உறுத்தலாகவும் இருக்காது. ஆர்.எஸ்.எஸ். பிள்ளை என தான் விமர்சித்த கட்சியிடம் துணை முதல்வர் பதவி கேட்டு நிற்பது திருமாவுக்குக் […]

ஸ்டாலின் முதல் ஆதரவு விஜய்…? எடப்பாடிக்கு நெக்ஸ்ட்

எந்த நேரமும் அதிமுகவுக்கு ஸ்டாலின் வழங்கலாம் என்று சொல்லப்படும் நிலையில், முதல் வாய்ப்பு விஜய்க்கு வழங்கப்படும் என்றும் அவர் திமுக ஆதரவை ஏற்கவில்லை என்றால் வேறு வழியின்றி எடப்பாடி பழனிசாமிக்கு வழங்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இப்போதே அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது மக்களிடம் பெரும் அதிருப்தி ஏற்படும். அதை தமிழக வெற்றி கழகம் தங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்துவார்கள்! அனுதாபம் கிடைக்கும். எனவே, முதல் வாய்ப்பு தமிழக வெற்றி கழகத்திற்கு வழங்க ஸ்டாலின் முன்வருகிறார். அதாவது நிபந்தனையுடன் ஆதரவளிக்கப்படும். […]

விஜய்க்கு ஆளுநர் மூன்று நாள் கெடு. ரசிகர்கள் மெரினா புரட்சி?

எந்த நேரத்திலும் எடப்பாடி பழனிசாமி கவர்னரை சந்திக்க வாய்ப்பு உண்டு என்று பரபரப்பு கிளம்பியிருக்கும் நேரத்தில், ‘விஜய் முதல்வர் ஆவதை தடுக்கவில்லை. அதிமுக, திமுக தங்களுக்குள் இணைந்து பெரும்பான்மையை நிரூபித்தால்கூட, அவர்களும் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்’ என்று தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் கூறியிருக்கும் கருத்து விஜய் கட்சியினரை உசுப்பேற்றியிருக்கிறது. தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு ஆர்.வி.அர்லேகர் அளித்த பேட்டியில், ‘’விஜய் தனக்கு பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்தால் எந்தெந்த கட்சிகளின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்பதை முன்கூட்டியே நிரூபிக்க […]

விஜய் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா..? கவர்னர் ஆட்சி அமையுமா..?

தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரை பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தங்களது எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய சொல்லி விட்டு. மீண்டும் காங்கிரஸ் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. ஏனென்றால் நேற்றைய கவர்னர் அவமானத்தை விஜய்யால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதோடு பாதுகாப்பு குறைப்பு அவரை இன்னமும் டென்ஷன் ஆக்கியுள்ளது. தனிப்பெரும்பான்மையை வாக்கு எண்ணிக்கையின் எந்தவொரு நிலையிலும் பெறாத தவெக தலைவருக்கு கான்வாயை அனுப்புவதற்கு முன்னதாக பல முறை யோசித்திருக்க வேண்டும். ஆனால், அனுப்பிவிட்டு அதை வாபஸ் பெறுவது […]

இபிஎஸ் முதல்வரா… துணை முதல்வரா..? ரிசார்ட் அரசியல்

கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை கூட்டிவைத்து முதல்வர் பதவிக்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி. அதேபாணியில் இப்போது புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எப்படியும் இபிஎஸ் முதல்வர் அல்லது துணை முதல்வர் ஆவது உறுதி என்கிறார்கள். விஜய்க்கு போதிய எண்ணிக்கை இல்லை என்றதும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு கோரியிருந்தால் இத்தனை சிக்கல் ஏற்பட்டிருக்காது. ஏனென்றால் ஓர் ஆண்டுக்கு வெளியே இருந்து ஆதரவு வழங்குவது குறித்து பரிசீலித்திருக்கும் மனநிலையில் எடப்பாடி இருந்தார். ஆனால், செங்கோட்டையன் உள்ளிட்ட சிலர் […]

விஜய்க்கு எதிராக உதயநிதி சைலன்ட் மூவ்… ஸ்டாலின் ஸ்கெட்ச்

விஜய் வெற்றியை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றாலும், தோல்விகளைக் கண்டு பழக்கப்பட்ட ஸ்டாலின் அமைதி காக்கிறார். ஆனால், விஜய்யை முதல்வராக பதவியேற்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் உதயநிதி பல்வேறு நடவடிக்கைகளை செய்துவருகிறார். நேற்று அதிமுக ஆட்சியமைக்க திமுக ஆதரவு கொடுக்கிறது என்று செய்திகள் வெளியாகின. இதற்கு பேச்சுவார்த்தை நடந்தது உண்மை என்றாலும், திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் அவசரப்படாமல் கொஞ்சம் வெயிட் பண்ணுவோம் என்ற அணுகுமுறையை கையில் எடுத்துள்ளன. அதேநேரம், சட்டமன்றத்தில் தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதை […]

விஜய்யை மிரட்டும் பாஜக… காங்கிரஸை கழட்டிவிடுவாரா..?

விஜய் முதல்வராக அமரப்போகிறார் என்று இரண்டு நாட்களாக தமிழகம் முழுக்க பரவியிருந்த கொண்டாட்ட மனநிலை, சட்டென்று நேற்று வடிந்துவிட்டது. கவர்னரை சந்தித்துவிட்டு திரும்பிய விஜய்க்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதாவது விஜய் வசிக்கும் நீலாங்கரை வீடு, பனையூர் கட்சி அலுவலகம் ஆகிய இடங்களில்  கடந்த இரண்டு நாட்களாக மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர் வீடு இருக்கும் தெருவுக்குள் அனுமதி பெற்று உள்ளே வரும் வாகனங்களின் நம்பர் போலீஸாரால் பதிவு செய்யப்பட்டு வந்தன. தற்போது, ஆட்சி அமைக்க […]

விஜய்க்கு கவர்னர் நெருக்கடி..? பெரும்பான்மை சிக்கல்

விஜய் பதவியேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் கொடுக்கும்படி ஆளுநர் மாளிகை நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவருடன் செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர். விஜய்யை வரவேற்ற ஆளுநர் அர்லேகர், அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, விஜய் ஆட்சி அமைக்க […]

ஸ்டாலின் முதுகில் குத்திய ராகுல்..? விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு.

திமுக கூடாரத்திலிருந்து விஜய் கூடாரத்திற்கு காங்கிரஸ் கட்சி வந்துவிட்டது. தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் ஆதரவளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது மதவாத சக்திகளை என்றும் கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்பதே நிபந்தனை. உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்திலும் தவெக உடன் கூட்டணி என காங்கிரஸ் அறிவிப்பு. விஜயுடன் கூட்டணி போவது காங்கிரஸின் கட்சியின் முடிவு தான். ஆனால் அவர்கள் திமுகவிற்கு செய்யும் நன்றிக்கேட்ட துரோகம் என்று திமுகவினர் கொதிக்கிறார்கள். ஏனென்றால், 2019, 2024 ஆகிய தேர்தல்களில் […]

சேகர் பாபு கண்ணீர் நாடகமா..? ஸ்டாலின் கொளத்தூர் பஞ்சாயத்து

கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தாலும் ஸ்டாலின் வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி கூறினார். அவருக்குப் பின்னே நின்றபடி கண்ணீர் விட்டு கலங்கி அழுதார் சேகர் பாபு. இந்த நிலையில் இது நாடகம் என்றும் அவரை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்றும் முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமன் பற்ற வைத்திருக்கிறார். நேற்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். கொளத்தூர் மேயர் சிட்டிபாபு மேம்பாலத்தில் இருந்து தொண்டர்கள் படை சூழ […]