News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

’’சிபிஎம், சிபிஐ கட்சிகள் ஆதரவில் தான் தவெக மந்திரி சபை இருக்கு.. சண்முகமும், வீரபாண்டியனும் ஆதரவு வாப்ஸ்ன்னு எப்போ சொல்வாங்கனு ஆளுநர் காத்துக்கிட்டு இருக்கார்…’’ என்று முத்தரசன் பேசிய பேச்சு முதல்வர் விஜய்யை கடுமையாகத் தாக்கியிருக்கிறது. எனவே, இடைத்தேர்தலுடன் கம்யூனிஸ்ட்களுடன் கனெக்‌ஷன் கட் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன.

சென்னை பாடியில் செய்தியாளர்களிடம் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரும், மூத்த தலைவருமான இரா.முத்தரசன், ‘’அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எங்கள் மீது ஏன் திடீரென கோபம் வந்தது என்று தெரியவில்லை. சட்டப்பேரவையிலும் சரி, சட்டப்பேரவைக்கு வெளியிலும் சரி முதல்வர் விஜய்யும், தவெக அமைச்சர்களும் பிரச்சினைகளை திசை திருப்புகின்றனர்.

சட்டப்பேரவையில் ஒரு உறுப்பினர் கேள்வி எழுப்பினால், அதற்கு முதல்வரும், அமைச்சர்களும் பதிலளிக்க வேண்டும். அதற்கு மாறாக திசை திருப்பி பேசுவதால் எந்த பயனும் ஏற்படாது. இவ்வாறு பிரச்சினைகளை திசை திருப்புவதால், எந்த பிரச்சினையும் தீர்ந்துவிடாது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறும் இடதுசாரி கட்சிகளின் தயவால் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தவெக ஆட்சிக்கு அளித்திருக்கும் ஆதரவை வாபஸ் வாங்கிவிட்டால், அமைச்சரவையே இருக்காது. இதற்காக தான் ஆளுநரும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். எப்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில செயலாளர்கள் வாபஸ் வாங்குதாக அறிவிப்பார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறார். எனவே, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இதை உணர்ந்து பேச வேண்டும்’’ என்று பேசியிருக்கிறார்.

இந்த பேச்சு தவெகவினரை மட்டுமின்றி விஜய்யையும் டென்ஷனாக்கியிருக்கிறது. எனவே, இடைத்தேர்தலுடன் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு விடை கொடுக்கும் மூடுக்கு வந்திருக்கிறார். அதனால் கடைசி வார்னிங் கொடுத்துவிடுங்கள் இல்லையென்றால் வெளியே விரட்டுங்கள் என்று கூறியிருக்கிறாராம்.

தாராபுரம், மதுராந்தகம் இடைதேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுவது விஜய்க்கு பிடிக்கவில்லை. ஏனென்றால், திமுக, அதிமுக சொல்லும் குற்றச்சாட்டுகளை வழக்கமான அரசியல் விமர்சனமாக பார்க்கும் மக்கள் கூட, ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எழுப்பும் கேள்விகளை வேறு விதமாக பார்க்க வாய்ப்பு இருக்கிறது என்று கருதுகிறார்.

இதுகுறித்து பேசும் தவெகவினர், ‘’கம்யூனிஸ்ட் கட்சியினர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த போதே மோதல் ஆரம்பித்துவிட்டது. இப்போது 4 எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் வாங்கினால் ஆதரவு எண்ணிக்கை 117 ஆக குறைந்துவிடும். ஆனாலும், மெஜாரிட்டியை விட 3 எம்.எல்.ஏக்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். அதனால் தோழர்கள் மிரட்டிப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். திமுகவை மனம் குளிர வைப்பதற்காக இப்படி மிரட்டல் மூலம் காலம் தள்ளுவதை உடனே நிறுத்திவிடுங்கள். இல்லையென்றால் நடுரோட்டில் நிறுத்தப்படுவீர்கள்’’ என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link