Share via:
உலகம் முழுக்க புகழ்பெற்றது ஸ்டாபக்ஸ் காபி நிறுவனம். இந்த நிறுவன
கடையில் காபி குடிப்பதை பெருமையாகக் கருதும் அளவுக்கு சிறப்பானது. விஜய் ஆட்சியில்
இந்த நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு கையெழுத்துப் போட்டிருக்கிறது. அதோடு,
இன்று வெற்றிப் பயணத் திட்டத்துக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தமிழக அரசு செய்திக்குறிப்பின் அடிப்படையில், ‘’தமிழ்நாடு
முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில்,
முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், 800 தொழில்நுட்ப
நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்காவைத் தலைமையிடமாகக்
கொண்ட ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தால் சென்னையில் உலகளாவிய திறன் மையம் (Global
Capability Centre – GCC) அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு
ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.’’ என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் தனது திறன் மையத்தை
நிறுவ முன்வந்தது ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வெற்றிப் பயணம்” திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த
ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் “வெற்றிப்
பயணம்” திட்டத்தை வரும் அக்டோபர் 2ம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

