Share via:
தமிழ்நாட்டில் இந்து வாக்குகளைக் குறிவைத்து
பாஜக காய் நகர்த்திவருகிறது. விநாயகர் வடிவில் விஜய் படங்கள் வைரலாகிவருகின்றன.
முந்தைய திமுக அரசும், முதல்வராக இருந்த
ஸ்டாலினும் இந்து பண்டிகைகளை புறக்கணித்துவந்தன. இந்த நிலையில் விஜய் மட்டுமே உண்மையான
மதச் சார்பற்ற ஆட்சியை நடத்தி வருவதை உறுதி செய்திருக்கிறார். விஜய் கிறிஸ்தவராக இருந்தாலும், உலகமெங்கும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையை
சிறப்பாக கொண்டாடும் மக்களுக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
விஜய் தெரிவித்திருக்கும் வாழ்த்து செய்தியில்,
‘’விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன். இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால்
இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும்,
அமைதியும், வளமும் பெருகட்டும்! மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின்
பாதையில் பயணிக்கட்டும்..’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்துக்கள் ஓட்டுக்களையும் விஜய் பறித்துவிடுவார்
என்று இப்போது பாஜக பதறிக்கொண்டிருக்கிறது. ஸ்டாலின் ஸ்டைலை விஜய் செய்வது போன்று விஜய்
விநாயகர் செய்திருக்கிறார்கள். இதை தடுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் பாஜக தவிக்கிறது.
விஜய் என்ன செய்தாலும் அது டிரெண்டிங் ஆகிவிடுகிறதே.

