Share via:
சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசிய மிசா பேச்சைக் கண்டித்து,
தி.மு.க. தலைமைக் கழக அறிவிப்பின் படி இன்று வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பதிலடி கொடுப்பது போன்று மிசா குறித்து அமைச்சர்
நிர்மல் குமார் இன்றும் சாட்டையடி கொடுத்திருக்கிறார்.
திமுகவினர் இன்று, ‘’ஹிட்லர் முகமாக முதலமைச்சர் விஜய்யும், அவரின்
அமைச்சர்களும் ஆணவப் போக்குடன் பொய்யை மட்டுமே பேசி வருகிறார்கள். இதுபோன்ற பாசிசப்
போக்கை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்! ‘அதிகாரத்திற்கு கட்டுப்பட மாட்டேன்’ எனச்
சொல்லி சிறைக்குச் சென்ற கழகத் தலைவர் அவர்களைப் பற்றி, ‘எனது படத்தை ரிலீஸ் செய்ய
விடுங்கள்’ என கொடநாடு சென்று கெஞ்சியவர் பேசுவதற்கு துளியும் தகுதி இல்லை’’ என்று
ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்
நிர்மல்குமார், ‘‘ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதற்கு ஆதாரம் இருக்கா; கைதான எல்லோரும்
ஆதாரம் வைத்து இருக்கிறார்கள். ஒருவர் கைது ஆகியிருந்தால் டிடென்ஷன் காப்பி காட்ட வேண்டும்;
டிடென்ஷன் காப்பி இல்லாத ஒரே தியாகி இவராக தான் இருப்பார் போல. இவரை நீங்கள் திரும்ப,
திரும்ப தியாகியாக ப்ரொஜெக்ட் பண்றதுனால ஒரு பிரயோஜனமும் இல்லை. ஸ்டாலின் மிசா சட்டத்தின்
கீழ் கைது செய்யப்படவில்லை. வேற ஏதோ ஒரு சில காரணங்களுக்காக கைது செய்யப்பட்டார் என்பது
30 வருடம், 40 வருடம் சர்ச்சை. இதுவரைக்கும் அவர்களால் ஒரு டிடென்ஷன் காப்பி கூட கொடுக்க
முடியவில்லை.
இவ்வளவு பெரிய தியாகி கைது செய்யப்பட்டார் என்றால் எதுக்கு டிடென்ஷன்
காப்பி அழிக்கப்பட்டது. எல்லோரும் சொல்கிற குற்றச்சாட்டு 1989ல் அவர் ஆட்சி காலம்
வந்த பிறகு அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்க கூடாது என்று அழித்துவிட்டார்கள் என்று
சொல்கிறார்கள்.
மிசாவில் கைது செய்யப்பட்ட எல்லோருக்கும் ஆதாரம் இருக்கிறது;
ஸ்டாலினுக்கு மட்டும் ஆதாரம் இல்லை. சட்டசபையில் அவர்கள் நடந்து கொண்ட விதத்தை பார்த்து
அனைவரும் சிரிக்கின்றனர். மக்களுக்கு தெளிவாக தெரியும்; இரண்டு இடைத்தேர்தலில் இவர்கள்
வந்து திருமங்கலம் பார்முல்லான்னு சொல்லி எப்படி 100 கோடி, 200 கோடி ரூபாய் கொண்டு
வந்தாங்களோ.எத்தனை 100 கோடி ரூபாய் கொண்டு வந்தாலும் மக்கள் அதை வாங்கிட்டு, என்ன
செய்ய வேண்டுமோ, அதை தெளிவாக செய்வார்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.
இவர்கள் எல்லாம் எங்கே இருந்து கொள்ளை அடித்தார்கள்; எத்தனை லட்சம் கோடி ரூபாய் தமிழகத்தில்
இருந்து கொள்ளை அடித்தார்கள்.
அத்தனை லட்சம் கோடி ரூபாயில் இருந்து இன்றைக்கு 100 கோடி ரூபாய்,
200 கோடி ரூபாயை வைத்து கொண்டு ஒவ்வொரு இடைத்தேர்தலுக்கும் வருவார்கள். இவர்களை
எப்படி சமாளிக்க வேண்டும் என்று மக்களுக்கு தெரியும். இடைத்தேர்தலில் இரண்டு கட்சிக்கும்,
திமுகவுக்கும், அதிமுகவுக்கும் டெபாசிட் கூட கிடைக்காது’’ என்று மீண்டும் தாக்கியிருக்கிறார்.

