News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

லண்டனுக்குப் போய் நாலு நாட்களான பிறகும் முதலீடு வரவே இல்லை என்று கிண்டலடித்த அத்தனை பேருக்கும் பதிலடி கொடுப்பது போன்று முதலீட்டுகளை அள்ளிக் குவித்திருக்கிறார் முதல்வர் விஜய்.

நேற்றைய தினம் தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ (Wilson Power Solutions) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், சுமார் 9,400 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ரூ.12,300 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முன்னணி நிறுவனங்களுடன் கையெழுத்தாகியுள்ளன.

தவெக அரசின் ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தின் மீது தொழில் நிறுவனங்களுக்கு உருவாகியுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே இந்தப் புதிய ஒப்பந்தங்கள். முந்தைய திமுக ஆட்சியில் முதலீடுகளை ஈர்த்ததாக அறிவிப்புகள் மட்டுமே வெளியான நிலையில், முதலீடுகளின் பட்டியலைக் கேட்டால் வெற்றுத் தாளே விடையாகக் கிடைத்தது. ஆனால், வெளிப்படையான மற்றும் ஊழலற்ற வெற்றித் தலைவரின் நிர்வாகம், தமிழ்நாட்டின் மீது தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையை அதிகரித்து வருகிறது. முதலீடு, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு என தமிழ்நாடு வளர்ச்சிக்கான வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

முதலீடு குறித்து திமுக வெளியிட்ட கட்டுக்கதைகளை உடைக்கும் வகையில் தவெகவினர், ‘’தவெக அரசு பொறுப்பேற்ற முதல் காலாண்டிலேயே தனது முதல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) L&T குழுமத்துடன் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் 18,600 கோடி ரூபாய் முதலீடும், 8,200 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக உள்ளது. இதே நேரத்தில், முந்தைய திமுக அரசு தனது முதல் காலாண்டில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட கையெழுத்திடவில்லை என்பது அதிகாரப்பூர்வ பதிவுகளில் உள்ளது.

திமுக அரசு தனது முதல் ஆறு மாதங்களில் மொத்தம் 21,021.54 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மட்டுமே கையெழுத்திட்டது. ஆனால் தவெக அரசு வெறும் 50 நாட்களிலேயே அந்த அளவை எட்டும் வகையில் செயல்பட்டுள்ளது. மேலும், 2026 ஜூலை மாதத்தில் Hitachi Energy, Vikram Solar, Chubb, Nordex, MotiveLink, University of Western Australia உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களையும் சேர்த்துக் கணக்கிட்டால், இதுவரை தவெக அரசு 35,062 கோடி மதிப்பிலான முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது.

இது முந்தைய அரசின் செயல்திறனை ஏற்கனவே கடந்துவிட்டது என்பதையே அதிகாரப்பூர்வ தகவல்கள் காட்டுகின்றன. மேலும், 2026 செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் முதல் அரையாண்டிற்குள் இந்த முதலீட்டு எண்ணிக்கை இன்னும் கணிசமாக உயரும்’’ என்கிறார்கள்.

விஜய் பேச்சில் மட்டுமில்லாமல் முதலீடு ஈர்ப்பதிலும் சாதனை படைத்துவருகிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link