News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காரணமாக நிறைய குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், ஒரே கட்டமாக 29,108 புதிய காவல் பணியிடங்கள் உருவாக்குவதற்கு விஜய் உத்தரவு போட்டிருக்கிறார். இது சிறப்பான முன்னெடுப்பு என்று காவல் துறை அதிகாரிகள் பாராட்டுகிறார்கள்.

இதுகுறித்துப் பேசும் காவல் துறை அதிகாரிகள், ‘’முந்தைய காலத்தில் தேசிய சராசரியை விட முன்னிலையில் இருந்தது தமிழ்நாட்டின் காவலர் – மக்கள் விகிதம். அதன்பிறகு போதிய மனிதவளத் திட்டமிடல் இல்லாததால் கடுமையாக சரிந்தது.

2013: தமிழ்நாடு: 198.07 – தேசிய சராசரி: 185.25

2024: தமிழ்நாடு: 171.98 தேசிய சராசரி: 194.40

தேசிய சராசரியை விட முன்னிலையில் இருந்த தமிழ்நாடு, பின்னர் தேசிய சராசரியை விட 22.42 புள்ளிகள் பின்தங்கியது. அதுமட்டுமல்ல… கடந்த ஏழு ஆண்டுகளில் புதிய காவல் ஆணையரகங்கள், காவல் மாவட்டங்கள், சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டும் வெறும் 1,881 புதிய பணியிடங்களே உருவாக்கப்பட்டன. இதனால் சுமார் 20,000 காவலர்கள் மறுபணியமர்த்தப்பட்டு, காவலர்களின் பணிச்சுமை மேலும் அதிகரித்தது.

2009-ல் கணக்கிடப்பட்ட தேவைக்கேற்ப 24,481 பணியிடங்கள் தேவைப்பட்ட நிலையில், 2011, 2013, 2018 காலகட்டங்களில் 16,014 பணியிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. அதாவது தேவையான எண்ணிக்கையில் 8,467 பணியிடங்கள் குறைவாகவே இருந்தன. இதன் தாக்கம் குற்றத் தடுப்பு, குற்றக் கண்டறிதல், முக்கிய குற்றங்களின் விசாரணை மற்றும் அன்றாட காவல் பணிகள் வரை சென்றது.

17 ஆண்டுகளாக நீடித்த இந்தக் குறையை இப்போது சரிசெய்கிறார் முதல்வர் விஜய் ஒரே கட்டமாக 29,108 புதிய காவல் பணியிடங்கள் Singappen Special Force மற்றும் Anti-Narcotics Task Force-க்கு 4,563 புதிய பணியிடங்கள் காவலர் – மக்கள் விகிதத்தை தேசிய சராசரியை விட உயர்த்தும் நடவடிக்கை புதிய வாகனங்கள் மூலம் அவசர அழைப்புகள் மற்றும் குற்றச் சம்பவ இடங்களுக்கு விரைவான சென்றடையும் திறன் காவல்துறை நவீனமயமாக்கலுக்கு 212 கோடி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு காவல் நிலையங்களின் அவசரகால மற்றும் எதிர்பாராத செலவுகளுக்கான நிதி பல மடங்கு உயர்வு (லஞ்சத்தை தவிர்க்கும் விதமாக) 2026–27 காவல்துறை ஒதுக்கீடு 4,477.58 கோடி.

கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி ஆண்டு ஒதுக்கீட்டை விட 11.6 மடங்கு அதிகம். முந்தைய ஆட்சிகள் விட்டுச் சென்ற மனிதவளப் பற்றாக்குறையை கணக்குடன் சரிசெய்து, காவல்துறைக்கு தேவையான ஆட்கள், வாகனங்கள், தொழில்நுட்பம், நிதி என அனைத்தையும் வலுப்படுத்துகிறார் முதல்வர் விஜய். காவல்துறை வலுவாகும் போது, மக்கள் பாதுகாப்பும் மேம்படும்…’’ என்று மகிழ்ச்சி அடைகிறார்கள்.

சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்கு விஜய் எடுத்திருக்கும் முயற்சி வெற்றி பெறட்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link