அமைச்சர் நேருக்கு ஜெயில் ரெடி..? கைவிடுகிறாரா உதயநிதி..?

வரும் சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் திமுகவின் முக்கியப் புள்ளிகளில் பலர் சிறையில் இருப்பார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பல கூட்டங்களில் பேசிவருகிறார். அப்படி இபிஎஸ் பேசுவது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் அமலாக்கத்துறை நடவடிக்கை வேகமெடுத்துவருகிறது. இந்த நிலையில் நேரு கைதானால் அன்பில் மகேஸ்க்கு செல்வாக்கு அதிகரிக்கும் என்று திமுகவே அமைதி காப்பாதாக ஒரு செய்தி வெளியாகிறது. அமைச்சர் நேரு மீது அமலாக்கத்துறை பணி நியமனத்தில் 888 கோடி ஊழல் என்று முதல் […]
வைத்திலிங்கத்தால் அரசியல் அனாதையான பன்னீர்… சாமியாராகப் போகிறாரா..?

ஆதரவாளர்கள் எல்லோரும் வெளியேறிய பிறகும் தனக்கு வைத்திலிங்கம் துணையாக இருப்பார் என்று பன்னீர்செல்வம் மலை போல் நம்பிக்கொண்டு இருந்தார். அவரும் இன்று பன்னீருக்கு டாட்டா காட்டிவிட்டார். இதையடுத்து திமுகவுக்குப் போவதா அல்லது சாமியாராகிவிடுவதா என்று பன்னீர் யோசிப்பதாகத் தகவல். ஒரத்தநாடு தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருக்கும் வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இன்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருக்கிறார். அதிமுகவில் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட […]
சிபிஐ விசாரணையில் திமுகவை போட்டுக் கொடுத்தாரா விஜய்..? திசை மாறும் வழக்கு

கரூர் விபத்து விவகாரத்தை விசாரணை செய்துவரும் சிபிஐ, நேற்று விசாரணக்கு ஆஜரான விஜய், இந்த விவகாரத்தில் அவர் மனதில் இருந்த சந்தேகங்களை கொட்டித் தீர்த்ததாகக் கூறப்படுகிறது. இதையொட்டி, இந்த வழக்கு தேர்தல் சமயத்தில் திசை மாறும் என்றும் சொல்லப்படுகிறது. நேற்று டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் 6 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 12-ம் தேதி ஆஜரான நேரத்தில் விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. காலை 10.30 மணிக்கு […]
கவர்னர், எடப்பாடி வெளிநடப்பு. சட்டமன்றத்தில் திமுக அதகளம்

இன்று காலை தொடங்கிய 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றமுதல் கூட்டத்தொடர் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கவர்னரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். இன்றைய கூட்டத்திற்கு வருகை தந்தை ஆளுனருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு மற்றும் காவல்துறை மரியாதை அளிக்கப்ப்பட்டது. கருணாநிதி புத்தகத்தைக் கொடுத்து சபாநாயகர் வரவேற்பு கொடுத்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்திய விதம் மற்றும் அவையிலிருந்து அவர் வெளிநடப்பு செய்தது போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அதேவகையில் இன்றைய கூட்டத்தொடரும் […]
விஜய் டெல்லியில் ஆஜர்… ஜான் ஆரோக்கியசாமிக்கு கைது ஆபத்து..?

கரூரில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பான இரண்டாம் நாள் விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். இந்நிலையில் விஜய் கட்சிக்கு வெளிநாட்டு நிதி பெற்ற வகையில் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமிக்கு சிக்கல் எழ வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. தவெக தலைவரான நடிகர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் […]
மோடி மேடையில் டிடிவி தினகரன்…. பன்னீர், சசியும் எடப்பாடியுடன் சங்கமம்.?

வரும் 23ஆம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை நாளை வெளிப்படையாக அறிவிக்கிறார் டிடிவி தினகரன். அமமுகவின் அனைத்து மாவட்டத் தலைவர்களும் அதிகப்படியான வண்டிகளில் வர வேண்டும் என்று இப்போது வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ஆகியோர் பங்கேற்பதும் உறுதியாகியுள்ளது. இப்போது பன்னீரின் நிலையே பரிதாபமாக உள்ளது. இவர் அமமுகவில் இணைந்து பயணிக்க முடியாமல், தனிக்கட்சி தொடங்கவும் […]
மது விற்பனையில் ஸ்டாலின் நம்பர் ஒன்…? சியர்ஸ் தமிழ்நாடு

தமிழ்நாடு நம்பர் ஒன் என்ற இடத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று ஸ்டாலின் சொல்லிக்கொண்டு இருக்கிறார். மற்ற விஷயங்களில் எப்படியோ மது விற்பனையில் நம்பர் ஒன் என்பது ஸ்டாலினுக்கு சாதனைதான். தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. தினமும் சராசரியாக ரூ.150 கோடி அளவுக்கு மதுவிற்பனை நடைபெறும். சனி, ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும், மற்ற பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறும். இந்தாண்டு 14, 15 தேதிகளில் டாஸ்மாக் […]
பிரவின், மாணிக்கம் சோலி முடிஞ்சது… விஜய் கட்சிக்குப் பாய்ச்சல்..?

திமுக கூட்டணியில் இருந்து எப்படியாவது காங்கிரஸை வெளியேற்றி விஜய்யுடன் கொண்டு போக போட்ட திட்டம் போட்ட விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் மற்றும் பிரவீன் சக்ரவர்த்திக்கு டெல்லி கதவை மூடிவிட்டது. இனியும் வெட்கம், மானம் இல்லாமல் காங்கிரஸில் தொடர்வார்களா அல்லது விஜய்யுடன் ஐக்கியமாவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்துப் பேசும் காங்கிரஸ் புள்ளிகள், ‘’தமிழக தேர்தல் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்கு காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைமை இன்று தமிழகத் தலைவர்களுடன் விரிவான சந்திப்பை […]
ஆண்களுக்கு இலவச பஸ்… பெண்களுக்கு 2,000 ரூபாய், இபிஎஸ் அட்டகாச தேர்தல் அறிவிப்பு

புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 109வது பிறந்தநாள் கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி இன்று முதல் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு அசத்தியிருக்கிறார். அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். 1. மகளிர் நலன் […]
ஏழைக்கு ஒரு நீதி, சாஸ்திராவுக்கு ஒரு நீதி..? சட்டம் ஒரு இருட்டறை

ஏழைகள் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டியிருந்தால், புல்டோசரை வைத்து இடித்துத் தள்ளுவதற்கு உத்தரவிடுகின்றன நீதிமன்றங்கள். அதுவே, பெரும் நிறுவனம் என்றால் நீதி மாறுபடும் என்பதற்கு உதாரணமாகிறது சாஸ்திரா ஆக்கிரமிப்பு நிலத்துக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சண்முகம், ‘’தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழக வளாகத்திற்குள், தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான 31.37 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து மாணவர் விடுதியைக் கட்டி, கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கட்டணம் என்ற பெயரில் […]

