தமிழகத்தில் குவியப்போகும் விமானங்கள். விஜய் அதிரடி மாற்றம்

தமிழ்நாடு அரசு சென்னை விமான நிலையத்தில் வான்வழி எரிபொருள் மீதான வாட் வரி 29 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாகக் குறைத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மற்றெல்லா விமான நிலையங்களிலும் ஜெட் எரிபொருள் மீதான வாட் வரி ஒரு சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுடன் போட்டியை உருவாக்கும் அதிரடி மாற்றமாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அமைச்சர் கீர்த்தனா, ‘’உள்ளூர் விமான நிறுவனங்களுக்கான வான்வழி எரிபொருள் மீதான வாட் வரி, சென்னை விமான நிலையத்தில் 29% இலிருந்து 16% ஆகவும், தமிழ்நாட்டில் […]
பொதுமக்கள் உயிருக்குப் பாதுகாப்பு முக்கியம். விஜய் கண்டிப்பான உத்தரவு

பருவ மழை பெய்யத் தொடங்கிவிட்டது. தமிழகத்தின் பல ஊர்களிலும் இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கும், மக்கள் உயிரைக் காப்பதற்கும் விஜய் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மக்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளார். சென்னை, எழிலகத்திலுள்ள வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு முதல்வர் விஜய் நேற்று வருகை தந்து முன்னெச்சரிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, இந்திய வானிலை […]
ஜெயலலிதா பாணியில் அரசு ஊழியர்களுக்கு விஜய் புதிய கட்டுப்பாடு.

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய அரசு ஊழியர்களை ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்து பதறவைத்தார் ஜெயலலிதா. அதே பாணியில் அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு, அரசையே விமர்சனம் செய்யும் ஊழியர்களுக்கு விஜய் கடும் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அரசின் கொள்கைகளை பொதுவெளியில் விமர்சிக்கக்கூடாது என வலியுறுத்தி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு ஊழியர்கள் மத்திய அல்லது மாநில அரசின் கொள்கைகள், திட்டங்கள் […]
துளித்துளியாய் மழைத்துளி. விஜய் கையில் விருது வாங்க ரெடியா..?

தண்ணீரின் முக்கியத்துவத்தை அனைவரும் உணரும் வகையில் பல படங்களில் கருத்து தெரிவித்திருக்கிறார் விஜய். அதை ஆட்சிக்கு வந்தபிறகும் தொடரும் வகையில், மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த துளி இலச்சினையை திறப்புவைத்து, மழைநீர் சேமிப்பை வலியுறுத்தியிருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கொண்டுவரப்பட்ட மழைநீர் சேகரிப்புத் திட்டம் சிறப்பானது என்றாலும், அதன் பின்னர் வந்த அரசுகள் அதில் கவனம் செலுத்தவே இல்லை. இந்த நிலையில் மழைநீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் முதல்வர் விஜய் அதிரடி அரசாணை […]
ராதிகாவுக்குப் பதிலாக காமினி… ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்

ஜெம் வீரமணி வழக்கில் விசாரணைக்கு உள்ளான டிஜிபி அலுவலக நிர்வாகத்துறை IG-ஆக இருந்த ராதிகா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கெனவே இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜரான அருண் ஐ.பி.எஸ், கண்ணன் ஐ.பி.எஸ். உள்ளிட்ட சில் அதிகாரிகள் ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். விஜய் ஆட்சியில் குற்றம் புரிந்தவர்களுக்கு உடனடி பதவி இல்லை என்பதை அறிவிக்கும் வகையில் ஐ.பி.எஸ். டிரான்ஸ்ஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் இருந்து முதன்மைச் செயலாளர் கார்த்திக் உத்தரவை வெளியிட்டுள்ளார். அதன்படி […]
விஜய் சூப்பர் குட் மாற்றம். லஞ்சமற்ற போலீஸ் ஸ்டேஷன் ரெடி

தமிழ்நாட்டிலுள்ள காவல்நிலையங்களுக்கு யார் போனாலும் ஒரு டீ சொல்லுங்க, பிரியாணி சொல்லுங்க, பேப்பர் வாங்கிட்டு வாங்க என்று போலீஸார் விரட்டுவது அன்றாடக் காட்சி. இதனை முற்றிலும் மாற்றும் வகையில் அன்றாட செலவனித்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. லஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையை விஜய் அரசு எடுத்திருப்பது பலத்த வரவேற்பு பெற்றுள்ளது. காவல்துறையின் நிர்வாகம் மற்றும் செயலாக்கப் பணிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அதற்கான செலவும் கணிசமாக அதிகரித்துள்ளது. போலீஸ் […]
கிட்னி திருடரின் ஹெலிகாப்டர் பரிசு… சம்பவம் பண்ணுங்க சி.எம்.சார்

கிட்னி ஆப்ரேஷன் செய்வதாகச் சொல்லி கிட்னி திருடின திமுக மணிச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன் ஹெலிகாப்டர் பரிசு கொடுக்கும் அளவுக்கு மாறியிருப்பது தவெகவினரை உசுப்பேற்றியுள்ளது. கடந்த முறை இங்கு பிரச்சாரம் செய்த தவெக விஜய், ‘கிட்னி திருடருக்கு கண்டிப்பான சரியான தண்டனை கொடுக்கப்படும்’ என்ரு வாக்கு கொடுத்தார். ஆனால், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெலிகாப்டரை பிறந்தநாள் பரிசாகக் கொடுத்திருக்கிறார். இதுகுறித்துப் பேசும் தவெகவினர், ‘’ஒரு சாதாரணக் […]
இரவு முழுக்க மழை… சென்னையைக் காப்பாற்றிய விஜய்

நேற்றைய தினம் இரவு முழுக்க முழுக்க மழை பெய்தாலும், சென்னையின் பெரும்பாலான இடங்களில் மழை தங்கவே இல்லை. அமைச்சர்கள் படுவேகத்தில் களம் இறங்கி சேவை செய்துவருகிறார்கள். குறிப்பாக தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் காலை முதல் களத்தில் இருக்கிறார். வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தியாகராய நகர் தொகுதியில் உள்ள பனகல் பூங்கா பகுதியில் மழைநீர் தேங்கியிருப்பதைத் தொடர்ந்து, அப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தேங்கியுள்ள மழைநீரை […]
தாயகம் காத்த காவலர்கள் நாள்… விஜய் வீர வணக்கம்.

சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் நடைபெறும் காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் பங்கேற்றார். 1959-ஆம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் தாய்நாட்டைக் காப்பதற்காக வீரமரணமடைந்த 10 மத்திய ரிசர்வ் காவல் படைக் காவலர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தியாகத்தைப் போற்றும் வகையில் முதலமைச்சர் விஜய் வீரவணக்கம் செலுத்தினார். இதுகுறித்து முதல்வர் விஜய் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘’1959-ஆம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் தாய்நாட்டைக் காப்பதற்காக வீரமரணமடைந்த 10 மத்திய ரிசர்வ் காவல் […]
இந்தியாவில் முதன்முதலாக டெங்கு தடுப்பூசி… விஜய் புத்தம்புதிய முயற்சி

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நன்னீரில் இருந்து உருவாகும் கொசுக்கள் மூலம், டெங்கு காய்ச்சல் பரவல் ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில், டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன. இந்நிலையில், முதன்முறையாக டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் முயற்சி தமிழகத்தில் நடக்க இருக்கிறது டெங்கு தடுப்பூசி குறித்து மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ், “ஜப்பானில் உள்ள ஒரு நிறுவனம் உலகிலேயே முதல் முறையாக டெங்குவுக்கான தடுப்பூசியை கண்டறிந்துள்ளது. அதனை உலக சுகாதார அமைப்பு […]

