Share via:
தமிழ்நாட்டிலுள்ள காவல்நிலையங்களுக்கு யார் போனாலும் ஒரு டீ சொல்லுங்க,
பிரியாணி சொல்லுங்க, பேப்பர் வாங்கிட்டு வாங்க என்று போலீஸார் விரட்டுவது அன்றாடக்
காட்சி. இதனை முற்றிலும் மாற்றும் வகையில் அன்றாட செலவனித்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை
வெளியிட்டுள்ளது. லஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையை விஜய்
அரசு எடுத்திருப்பது பலத்த வரவேற்பு பெற்றுள்ளது.
காவல்துறையின் நிர்வாகம் மற்றும் செயலாக்கப் பணிகள் நாளுக்கு நாள்
அதிகரித்து வரும் சூழலில், அதற்கான செலவும் கணிசமாக அதிகரித்துள்ளது. போலீஸ் ஸ்டேஷன்கள்
தங்கள் அன்றாட செலவுக்காக ஸ்பான்சர்களை சார்ந்திருப்பது குறைவதோடு, ஊழலைத் தடுக்கவும்,
ஒழிக்கவும் இந்த நிதி உயர்வு உதவும். எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கான
அன்றாட சில்லறை செலவினத்தை உயர்த்தி 71 கோடியே 1 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயாக நிதி ஒதுக்கீடு
செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் காவல் நிலையங்கள் குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கைக்கு
ஏற்ப 3 வகையாக பிரிக்கப்பட்டு நிதி உயர்த்தப்பட்டுள்ளது. முதல் வகை காவல் நிலைய நிதி
3,750 ரூபாயில் இருந்து 30 ஆயிரமாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாவது வகைக்கு 6 ஆயிரத்தில்
இருந்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
மூன்றாம் நிலை காவல் நிலையங்களுக்கான நிதி 8,250 ரூபாயிலிருந்து
50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதி கிட்டத்தட்ட எட்டு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.
இந்த புதிய நிதி மூலம் இனி எந்த காவல் நிலையமும்
செலவுக்காக யாரையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. முழுக்க முழுக்க லஞ்சம் இல்லாத காவல்
நிலையங்களை உருவாக்குவதற்கு முதல்வர் விஜய் எடுத்திருக்கும் முக்கியமான நடவடிக்கை என்று
ஒவ்வொரு காவல் துறையினரும் பாராட்டி வருகிறார்கள்.

