News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

நேற்றைய தினம் இரவு முழுக்க முழுக்க மழை பெய்தாலும், சென்னையின் பெரும்பாலான இடங்களில் மழை தங்கவே இல்லை. அமைச்சர்கள் படுவேகத்தில் களம் இறங்கி சேவை செய்துவருகிறார்கள்.

குறிப்பாக தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் காலை முதல் களத்தில் இருக்கிறார்.

வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தியாகராய நகர் தொகுதியில் உள்ள பனகல் பூங்கா பகுதியில் மழைநீர் தேங்கியிருப்பதைத் தொடர்ந்து, அப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் மூலம் உடனடியாக வெளியேற்றி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பல இடங்களில் மரங்களை அறுக்கும் பணியை ஆனந்தே முன்நின்று நடத்தினார்.

இதுகுறித்து பேசும் தவெகவினர், ‘’மூன்று மாதங்களாகவே முதல்வரின் உத்தரவின்படி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த காலங்களில் 4, 5 நாட்கள் வரை மழைநீர் தேங்கி நின்ற நிலையில், தற்போது 4, 5 மணி நேரங்களிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை முதல்வர் விஜய் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து வருகிறார். மேலும், பொறுப்பு அமைச்சர்கள் பணிகளை விரைந்து முடிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனாலே இத்தகைய மாற்றம்’’ என்கிறார்கள்.

நேற்றைய தினம் குறிப்பாக, ஆலந்தூர், வடபழனி, மதுரவாயல், வளசரவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளில் 10 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

வாழ்த்துக்கள் விஜய். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link