News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பருவ மழை பெய்யத் தொடங்கிவிட்டது. தமிழகத்தின் பல ஊர்களிலும் இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கும், மக்கள் உயிரைக் காப்பதற்கும் விஜய் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மக்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளார்.

சென்னை, எழிலகத்திலுள்ள வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு முதல்வர் விஜய் நேற்று வருகை தந்து முன்னெச்சரிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, இந்திய வானிலை ஆய்வு மையம் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ள மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் கலந்துரையாடி, மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் நிலை குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது முதல்வர் விஜய், ‘’கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படாத வகையில், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்.  மேலும், எல் நினோ தொடர்பான முன்னறிவிப்புகளை கருத்திற்கொண்டு, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்’’ என்று சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார்.  

அதோடு, கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து, பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பதற்காக நடவடிக்கைக்கு முக்கியத்துவம் தரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link