Share via:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நன்னீரில்
இருந்து உருவாகும் கொசுக்கள் மூலம், டெங்கு காய்ச்சல் பரவல் ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில்
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில், டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புகளும்
உள்ளன. இந்நிலையில், முதன்முறையாக டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் முயற்சி தமிழகத்தில்
நடக்க இருக்கிறது
டெங்கு தடுப்பூசி குறித்து மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ்,
“ஜப்பானில் உள்ள ஒரு நிறுவனம் உலகிலேயே முதல் முறையாக டெங்குவுக்கான தடுப்பூசியை கண்டறிந்துள்ளது.
அதனை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது. இந்தியாவிலும் அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியாவில் இன்னும் எந்த மாநிலமும் அதனை மக்களிடம் கொண்டு செல்ல முன்வரவில்லை.
இந்நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாடு முதலமைச்சரின்
வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் அந்த டெங்கு தடுப்பூசி ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன.
டெங்கு தடுப்புக்கு போதுமான மருத்துவர்களும், செவிலியர்களும் உள்ளனர்.
ஜப்பான் நிறுவனத்தின் அந்த டெங்கு தடுப்பூசி தமிழ்நாடு சூழலுக்கு
உகந்ததாக இருக்கிறதா என்பதை தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் ஆய்வுக்கு உட்படுத்த
இருக்கிறோம். அதன்பிறகு டெண்டர், கொள்முதல் நடக்கும்” என்று தெரிவித்தார்.
டெங்கு தடுப்பூசி சக்சஸ் ஆகிவிட்டால், தமிழகத்தில் கொசுவுக்கு
யாரும் அஞ்சுவதற்கு அவசியம் இல்லை.

