Share via:
தமிழ்நாடு அரசு சென்னை விமான நிலையத்தில் வான்வழி எரிபொருள் மீதான
வாட் வரி 29 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாகக் குறைத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள
மற்றெல்லா விமான நிலையங்களிலும் ஜெட் எரிபொருள் மீதான வாட் வரி ஒரு சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களுடன் போட்டியை உருவாக்கும் அதிரடி மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அமைச்சர் கீர்த்தனா, ‘’உள்ளூர் விமான நிறுவனங்களுக்கான
வான்வழி எரிபொருள் மீதான வாட் வரி, சென்னை விமான நிலையத்தில் 29% இலிருந்து 16% ஆகவும்,
தமிழ்நாட்டில் உள்ள பிற விமான நிலைகளில் வெறும் 1% ஆகவும் குறைக்கிறோம். இதன் மூலம்,
விமான பயணத்தை மிகவும் அணுகக்கூடியதாகவும், நம் பிராந்திய விமான நிலைகளை மிகவும் போட்டியிடும்
திறன் கொண்டதாகவும் மாற்றுவதற்கான முடிவான படியை எடுத்துள்ளோம்.
குறைந்த செயல்பாட்டு செலவுகள், விமான நிறுவனங்களை புதிய வழித்தடங்களை
அறிமுகப்படுத்தவும், பறக்கும் அளவுகளை அதிகரிக்கவும், சென்னையை விட விரிவடையவும் ஊக்குவிக்கும்.
இது நம் நகரங்களுக்கு சிறந்த இணைப்பை வழங்குவதாகும், சுற்றுலா மற்றும் வணிகத்திற்கு
ஊக்கமாக இருக்கும், மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிகங்கள் மற்றும் பயணிகளுக்கு
புதிய வாய்ப்புகளை உருவாக்கும். மாண்புமிகு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில்,
மேலும் பல பிராந்தியங்களை இணைக்கும், பொருளாதார சாத்தியத்தை விடுவிக்கும், தமிழ்நாட்டின்
அடுத்த கட்ட வளர்ச்சியை இயக்கும் வான்வழி சூழலமைப்பை கட்டமைத்து வருகிறோம்…’’ என்று
கூறியிருக்கிறார்.
விமான எரிபொருள் மீதான வரியை, சென்னை விமானநிலையத்தில் எரிபொருளை
நிரப்பிக்கொண்டால் 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதத்திற்கும், மாநிலத்திலுள்ள மற்ற விமானநிலையங்களில்
1 சதவீதத்திற்கும் தமிழக அரசு குறைத்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆரம்பகட்டத்தில்,
இதனால் தமிழக அரசிற்கு வருகின்ற வருமானம் குறையலாம். ஆனால், தற்போதைய பயணக்கட்டணம்
கணிசமான அளவில் குறையும்.
இதனால், அதிகமான விமானங்கள் இயக்கப்படலாம். அதிகமான பயணிகள் தமிழகத்திற்கு
வருவார்கள். இதன் மூலம், விருந்தோம்பல் தொழில்துறைக்கு வணிகம் அதிகரிக்கும். வேலை வாய்ப்புகளும்
அதிகரிக்கலாம். இம்மாதிரியான நிகழ்வுகளினால் அரசிற்கு வருமானத்தை கூட்டும். ஏறகென்வே,
சென்னை விமானநிலையம் தன்னுடைய பிரதான இடத்தை ஹைதராபாத்திற்கும் பெங்களூருக்கும் இழந்து
பல்லாண்டுகள் கடந்துவிட்டன. அதேபோலத்தான், கோயம்புத்தூர், கொச்சியிடம் தனது இடத்தை
இழந்துள்ளது. இந்த முடிவு இழந்த இடங்களை மீண்டும் பெறுவதற்கு உதவுகின்ற நடவடிக்கைகளில்
ஒன்று என்று பாராட்டுகிறார்கள்.

