News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

வெற்றிக் காய்கறி திட்டம் ஆரம்பம். சட்டென குறையும் விலைவாசி

தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், தீபாவளியையொட்டி 10 வகையான காய்கள் அடங்கிய வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டத்தை சென்னையில் அமைச்சர் காந்திராஜ் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் வருகிற சனிக்கிழமை வரை இந்த தொகுப்பு வழங்கப்படுகிறது. சென்னையில் 4 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் காய்கறி தொகுப்பில் அரை கிலோ வெங்காயம் […]

ஸ்வீட் அங்கிள் ஸ்டாலினுக்கு தவெக மரண கலாய். நாத்திகவாதி வேடம் எதுக்கு?

’அங்கிள் விஜய் அவர்களே… பயம் என்பது திமுக அகராதிலயே கிடையாது’ என்று நேற்று கோவை விழாவில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.. மேலும் அவர் பேசுகையில், ‘’விஜய்யை டம்மியாகிட்டு அவர் பின்னாடி இருக்கக்கூடிய கார்ப்பரேட் பவர் சென்டர்கள் தான் இந்த ஆட்சி ஆட்டிப் படைக்கிறாங்க. விஜய்யை வைத்து பவர் சென்டர்கள் வித்தை காட்டுற சர்க்கஸ்தான் இந்த தவெக ஆட்சி. பெரியார் அறிவுலகம் அமைத்ததற்குத் தாய்க் கழகம் வழங்கிய பாராட்டை ஊக்கமாகத் தலைவணங்கி ஏற்கிறேன். தந்தை பெரியாரும் – […]

தீபாவளியை 100 ரூபாயில் கொண்டாடலாம். விஜய் சிறப்புத்திட்டம்

பண்டிகை என்றாலே காய்கறிகளின் விலை ரொம்பவே எகிறிவிடும். இதனை கட்டுப்படுத்தவும் தமிழக மக்களுக்கு தீபாவளி பரிசாகவும் தவெக அரசு சார்பில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்புக் காய்கறி தொகுப்பு’ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதுதொடர்பில் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தீபாவளி பண்டிகையைப் பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அன்றாடச் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறி […]

மாணவர்களுக்குக் கொண்டாட்டம்..? விஜய் விருது வழங்கும் விழா

ஆட்சியைப் பிடிக்கும் வரையிலும் கல்வி விருது வழங்கும் விழா என்று மாணவர்கள் மீது அக்கறை காட்டிய முதல்வர் விஜய், ஆட்சிக்கு வந்ததும் பரிசு கொடுப்பதை தூக்கி வீசிவிட்டார் என்று கடுமையாக விமர்சனம் வந்தன. அதற்கு விஜய் தரப்பில் எந்த பதிலும் சொல்லப்படவில்லை. எனவே, கடுமையான வேலைப்பளுவால் விருது விழாவை விஜய் மறுத்துவிட்டார் என்றே அவரது கட்சிக்காரர்களும் நினைத்தார்கள். ஆனால், அரசுப் பணிகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பிஸியாக இருந்ததால், மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழா தள்ளிப்போனதே […]

பெருந்துறையில் விஜய்க்கு எம்.ஜி.ஆர். செங்கோல்.  கிஃப்ட் சர்ச்சை

எம்.ஜி.ஆரிடமிருந்து ஜெயலலிதா செங்கோல் வாங்குவது போன்று சரித்திரப் புகழ்பெற்ற புகைப்படத்தைப் போன்று எம்.ஜி.ஆரிடமிருந்து விஜய் வாங்குவது போன்று ஒரு பிரமாண்ட புகைப்படத்தை ஈரோடுக்கு வருகை தந்த விஜய்க்குக் கொடுத்து சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார். தமிழக முதலமைச்சர் விஜய் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.1,100 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த விழா காஞ்சிக்கோவில் பிரிவு அருகே உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா திருமண தில் நடைபெறுகிறது.  இந்த விழாவில் சுமார் 5,000 பேருக்கு வங்கிக் […]

குட்கா விஜயபாஸ்கருக்கு சீட் இல்லை..? விஜய் அட்டகாச மூவ்

நேற்றைய தினம் முதல்வர் விஜய் புதுக்கோட்டை பயணத்தில் எப்படியேனும் முன்னிடத்தைப் பிடிக்கவேண்டும் என்று முயற்சி செய்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் திட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது. அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கியிருக்கும் விஜயபாஸ்கருக்கு சீட் கொடுப்பதற்கு விஜய் தயாராக இல்லை என்று தெரிவிக்கிறார்கள். புதுக்கோட்டை விழாவிலும், ரோடு ஷோவிலும் விஜயபாஸ்கருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. விஜய்யின் இந்த நடவடிக்கை சரியென்று நிரூபிக்கும் வகையில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் […]

ஜிஎஸ்டி வீழ்ச்சியல்ல வளர்ச்சி. விஜய் ஆட்சியின் பக்கா ரிப்போர்ட்

கடந்த அக்டோபர் மாதத்தில் நாடு தழுவிய ஜிஎஸ்டி வசூல் ரூ.2.3 லட்சம் கோடியைத் தாண்டி வரலாற்றுச் சாதனை படைத்திருக்கும் நிலையில், தமிழகத்தின் ஜிஎஸ்டி வளர்ச்சி  3%-ஆக முடங்கிக் கிடப்பது தமிழகத்திற்குப் பெரும் பின்னடைவு என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். இந்த நிலையில் இது வீழ்ச்சியல்ல, வளர்ச்சி என்று ஆதாரபூர்வமாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறிவருகிரார்கள். இதுகுறித்து தவெகவினர், ‘’அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வருவாயில் தமிழ்நாடு “வெறும் 3% வளர்ச்சியுடன் பின்தங்கியுள்ளது” என்று கூறப்படும் கருத்து, […]

அமைச்சர் விக்னேஷ்க்கு விஜய் ரகசிய உத்தரவு. ஆபரேஷன் டாஸ்மாக்

தொடர்ந்து இரண்டாவது நாளாக பல இடங்களில் டாஸ்மாக் அடைக்கப்பட்டகாரணத்தால் குடி பிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதேநேரம், அரசு சாட்டையைக்கையில் எடுப்பது உறுதியாகியுள்ளது. ஏனென்றால் அமைச்சர் விக்னேஷ்க்கு ஆதரவாக விஜய் உறுதியுடன்நிற்கிறார். இதுகுறித்து பேசும் தவெகவினர், ‘’டாஸ்மாக்கில் வேலை செய்வதற்குமாத சம்பளம் 14,000 என்று இருந்ததை 33,000 ஆக மாற்றிஊதிய உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது.  வாரம் 1 நாள் விடுமுறை, மாதம் 2 நாள் போனஸ் விடுமுறை, வேலை செய்ய இலவச சீருடை , சீருடை தைப்பதற்கு கூலி […]

துரைமுருகன் மீது ஒழுங்கு நடவடிக்கை..? வேதமந்திரம் ஓதி திருமணம்

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமண விழாவில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓத திருமணம் நடைபெற்றது திமுகவில் மிகப்பெரும் விவாதமாகியுள்ளது. ஊருக்கு உபதேசம் செய்யும் துரைமுருகன் சொந்த வீட்டுக் கல்யாணத்தில் புரோகிதரப் பயன்படுத்தி திருமணம் செய்தது திமுகவின் செந்தில்குமார், சுப.வீரபாண்டியன் ஆகியோர் நேரடியாகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுக பகுத்தறிவு கொள்கைகளை கைவிட்டு 50 வருடங்களுக்கு மேல் ஆகிறது என்று கண்டிக்கும் திமுகவினர், ‘’புரோகித பார்ப்பனர்களின் வேத மந்திரம் முழங்க அஷ்டலட்சுமிகள் வரவேற்க திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களின் பேத்திக்கு […]

நேரு கைது..? அன்பில் மகேஷ்க்கு விசாரணை. அடுத்து யாருங்க..?

உச்ச நீதிமன்ற்த்தில் கே.என்.நேருவின் மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம், போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிக்க நினைத்த அன்பில் மகேஷ் வகையாக மாட்டியிருக்கிறார். திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.634 கோடி பணி நியமன ஊழல் வழக்கில் தனக்கு எதிரான சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அமலாக்கத்துறை அனுப்பிய […]