Share via:
தொடர்ந்து இரண்டாவது நாளாக பல இடங்களில் டாஸ்மாக் அடைக்கப்பட்ட
காரணத்தால் குடி பிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதேநேரம், அரசு சாட்டையைக்
கையில் எடுப்பது உறுதியாகியுள்ளது. ஏனென்றால் அமைச்சர் விக்னேஷ்க்கு ஆதரவாக விஜய் உறுதியுடன்
நிற்கிறார்.
இதுகுறித்து பேசும் தவெகவினர், ‘’டாஸ்மாக்கில் வேலை செய்வதற்கு
மாத சம்பளம் 14,000 என்று இருந்ததை 33,000 ஆக மாற்றி
ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. வாரம் 1 நாள் விடுமுறை, மாதம் 2 நாள் போனஸ் விடுமுறை, வேலை செய்ய இலவச சீருடை , சீருடை தைப்பதற்கு கூலி 6,000 ரூபாய், பண்டிகை போனஸ் 20,000, தனிநபர் கடன் வசதி, மருத்துவ சுகாதார காப்பீடு என்று எக்கச்சக்க வசதிகள் செய்துகொடுத்த
பிறகும், பாட்டிலை திரும்ப வாங்க மாட்டோம். ஸ்கேன் செய்து பாட்டில் விற்பனை செய்தால்
நேரமும் உழைப்பும் வீணாகிறது என்று ஸ்ட்ரைக் செய்கிறார்கள்.
தமிழக அரசின் காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்திற்கு
எதிராக அரசுக்கே எதிராக டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு,
அனுமதியின்றி கடைகளை மூடியதால் அரசுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.
டாஸ்மாக் வெளியிட்டுள்ள அறிக்கைபடி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரூ.150
கோடிக்கு மேல் இழப்பு என்றும் 2ம் தேதி திங்கட்கிழமை ரூ.80 கோடி இழப்பும் எற்படுள்ளது.
இதையடுத்து இதுவரை 1729 பேருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.
245 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இன்றும் போராட்டம் தொடர்ந்தால் சில அதிரடி முடிவுகள் எடுக்கப்படும்
என்றே தெரிகிறது. இதுகுறித்து அமைச்சர் விக்னேஷிடம் தகவல்கள் கேட்டறிந்த விஜய், சில
உத்தரவுகள் பிறப்பித்திருக்கிறார். டாஸ்மாக் ஊழியர்கள் எல்லை மீறினால் அதிரடி நடவடிக்கை
பாய்வது உறுதி.
20 வருஷ டாஸ்மாக் கொள்ளைக்கு விஜய் முடிவு கட்டியே தீர்வார்.

