News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

எம்.ஜி.ஆரிடமிருந்து ஜெயலலிதா செங்கோல் வாங்குவது போன்று சரித்திரப் புகழ்பெற்ற புகைப்படத்தைப் போன்று எம்.ஜி.ஆரிடமிருந்து விஜய் வாங்குவது போன்று ஒரு பிரமாண்ட புகைப்படத்தை ஈரோடுக்கு வருகை தந்த விஜய்க்குக் கொடுத்து சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.1,100 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த விழா காஞ்சிக்கோவில் பிரிவு அருகே உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா திருமண தில் நடைபெறுகிறது.  இந்த விழாவில் சுமார் 5,000 பேருக்கு வங்கிக் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்க உள்ளார். மேலும், ஈரோடு மாவட்டத்தில் முடிவடைந்த வளர்ச்சிப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த முதல்வர், அங்கிருந்து சாலை வழியாக பெருந்துறைக்கு வருகை தந்தார். சாலையின் இருபுறங்களிலும் காத்திருந்த மக்களுக்கு கை காட்டியபடி நகர்ந்தார். மனுக்களை வாங்கினார்.

பெருந்துறை செல்லும் வழியில் பெருமாநல்லூரில் அத்திக்கடவு அவினாசி திட்ட போராட்டக் குழுவினர் காத்திருப்பது தெரிந்ததும் அவர்களை நேரில் சென்று சந்தித்தார். அப்போது அவர்கள், ‘அத்திகடவு அவினாசி திட்டத்தில் சரியாக ஆய்வு செய்யவில்லை. 1400 குட்டைகள் விடுபட்டுள்ளன’ என்று தெரிவித்தனர். மேலும், ‘நிலத்தடி நீர் மட்டும் 1200 அடிக்குக் கீழ் இறங்கிவிட்டதால் 2வது கட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். அதை கேட்டுக்கொண்டார் முதல்வர்.

இதையடுத்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மகளிா் சுய உதவிக்குழுவினரின் காட்சி அரங்குகளை பார்வையிட்டார் முதலமைச்சர் விஜய். ,மகளிர் சுயஉதவிக் குழுவினரால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கண்காட்சியில் பார்வையிட்டதுடன், அவர்கள் தயாரித்த பொருட்களையும் ஆர்வமாக பார்த்து பணம் கொடுத்து அதனை வாங்கினார். தேநீர் குடித்துவிட்டு, அதற்கான பணத்தையும் அவர்களிடம் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொடங்குகையில் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், ம.விஜய்பாலாஜி ஆகியோர் எம்.ஜி.ஆருடன் முதல்வர் விஜய் இருக்கும் நினைவுப் பரிசு வழங்கினார்கள்.

இந்த விவகாரத்தை அதிமுக சர்ச்சையாகப் பார்க்கிறது. எனவே, எம்.ஜி.ஆர். பஞ்சாயத்து தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெருந்துறை விழா முடித்துவிட்டு இன்று மாலை ஈரோட்டில் இருந்து கோயம்புத்தூர் விமான நிலையம் கிளம்பி, சென்னைக்குச் செல்கிறார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link