விஜய் திறந்துவைத்த ஏரி… குடிநீர், விவசாயம் காக்கும் அட்டகாசத் திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் .ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் நீர்நிலைகள் புனரமைப்பில் அரசுசாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, இணையவழியில் தடையின்மைச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக நீர்வளத் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள “ஏரி” இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். அதோடு, தமிழக நீர்நிலைகளுக்கு புத்துயிர் கொடுக்க சி.எஸ்.ஆர்.நிதி பயன்படுத்துவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் பெருமளவு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையை நம்பியே உள்ளது. பருவமழை பொய்த்தால் தண்ணீர் பற்றாக்குறை, நிலத்தடி நீர்மட்டம் குறைவு, விவசாயம், கிராமப்புற வாழ்வாதாரம் […]
தீபாவளி மது விற்பனை மிகப்பெரும் சரிவு. மக்களுக்கு நல்ல செய்தி

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மது விற்பனை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எராளமான நபர்கள் குடிகாரர்களாக மாறுகிறார்கள். இந்த நிலையில், தீபாவளிக்கு மது விற்பனை குறைந்திருப்பது ஒரு நல்ல செய்தி. கடந்த தீபாவளிக்கு 790 கோடி ரூபாய்க்கு மது விற்பனையான நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு கடந்த 2 நாளில் வெறும் 441.38 கோடி ரூபாய் மட்டுமே விற்பனை நடந்துள்ளது. இதற்கு டாஸ்மாக்கில் நடந்த அதிரடி மாற்றங்கள் மட்டுமே காரணம். இதனால் கிட்டத்தட்ட ரூ.348 கோடி குறைவாக வசூலாகியுள்ளது. அதோடு […]
நாளை விஜய் விசாரணை..? நடுக்கத்தில் தவெக எம்.எல்.ஏக்கள்

நாளை காலை அத்தனை எம்.எல்.ஏக்களும் சென்னைக்கு வரவேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டம் பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு விஜய் சார்பில் அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நடக்கும் தவெக கூத்துக்களுக்கு முடிவு கட்டும் வகையில் கடும் எச்சரிக்கை விடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது, ஆட்டம் போடும் எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்களை அழைத்து கடுமையாக எச்சரிக்கை செய்வார். அதன்பிறகும் திருந்தாத நபர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும். […]
கலைஞர் நூலகத்திலும் திமுக மோசடி… அம்பலமாகும் திருட்டுக் கும்பல்

விஞ்ஞான மோசடிக்குப் பேர் போன திமுக ஏஐ மூலம் கோவை பெரியார் நூலகத்தில் நடந்திருக்கும் புத்தக மோசடி வெளியாகி தமிழகத்தையே கொதிக்க வைத்துள்ளது. நூல்கள் என்ற பெயரில் தரமற்ற குப்பைகளை மக்களின் வரிப்பணத்தில் வாங்கி, மாணவர்களையும் வாசகர்களையும் வாசிக்க வைத்த திருட்டுக் கும்பலின் ஊழல்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. இந்த வகையில் இப்போது மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடந்திருக்கும் ஒரு நூதன மோசடியும் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து தவெக ஐ.டி.விங், ‘’தமிழ்நாட்டை உலக அரங்கில் தலைகுனிய வைத்த […]
அடேங்கப்பா, இத்தனை டெண்டர்கள் ரத்து…? விஜய் ஸ்டிரிக்ட் ஆர்டர்

விஜய் அரசு பதவி ஏற்ற 6 மாத காலத்தில் கிட்டத்தட்ட மூவாயிரம் டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை எல்லாமே, திமுக காலத்தில் ஊழல் நடைமுறையில் போடப்பட்ட டெண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை டெண்டர்களையும் ரத்து செய்ததன் மூலம், தன்னுடைய ஆட்சியில் ஊழல் செய்ய விட மாட்டேன் என்பதை ஒரு முறை அழுத்தமாகக் கூறியிருக்கிறார் முதல்வர் விஜய். தவெக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட சில முக்கியமான டெண்டர்களின் பட்டியல் இது. · ஓரகடம் – செய்யூர் […]
விஜய் அரசின் அடுத்த அதிரடி…. உயர்மட்டக் குழு கலைப்பு!

ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த குரியன் ஜோசப் தலைமையிலான குழுவின் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஆவணங்களும் சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்க அரசு உத்தரவு. இந்த குழுவால் எந்த பயனும் இல்லை என்பதால் தமிழக அரசு அதிரடி உத்தரவு போட்டுள்ளது. இந்த அரசாணைப்படி சட்ட ஆணையம் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. கடந்த 7.8.2026-ன் படி, தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம் மறுசீரமைக்கப்பட்டது. இந்த சட்ட ஆணையத்திற்கு மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மத்திய – மாநில உறவுகள் […]
திமுகவின் சோலியை முடித்த விஜய்… கைது எப்போது..?

கோவை பெரியார் அறிவுலகம் புத்தக கொள்முதல் சர்ச்சையில் திமுகவின் பெயர் நாறத் தொடங்கிவிட்டது. புத்தகங்கள் வாங்குவதற்கு ஒதுக்கப்பட்ட 50 கோடி ரூபாயில் மெகா ஊழல் நடந்திருக்கிறது. அகல்விளக்கின் உரிமையாளரை ஒருவழியாக கண்டுபிடித்து பேட்டி எடுத்துள்ளனர். அவரோ, ‘’சில எழுத்துப் பிழை வந்துவிட்டது அரசு கேட்டா திருத்திக் கொடுக்கப் போகிறோம். இந்த கொள்முதல் எல்லாமே சென்ற வருடமே முடிந்துவிட்டது..’’ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார். இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்று அனைத்துக் கட்சித்தலைவர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். […]
பெரியார் அறிவுலகத்தில் விஞ்ஞான ஊழல்… ஸ்டாலினுக்கு விஜய் சவுக்கடி.

பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் வாங்கியதில் திமுக மெகா ஊழல் நடத்தியிருப்பதாக முதல்வர் விஜய் நேரடியாக குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். இந்த விவகாரத்தில் திமுக தலைகுனிந்து நிற்கிறது. 300 பக்க நூலின் விலை 1445 ரூபாய் என்று குறிப்பிட்டு ஊழல் நடந்திருக்கிறது. இது குறித்து முதல்வர் விஜய், ‘’மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே […]
பேரம் பேசி மாட்டிக்கொண்ட அதிமுக…. விஜய் செம ஸ்ட்ராங்க்

தவெக அரசை கலைக்க 30 கோடி ரூபாய் பேரம் பேசியதாக மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. முஸ்தபா கூறியபோது பலரும் அது பொய் என்று குற்றம் சுமத்தினார்கள். ஆனால், இன்று மதுரை மாநகராட்சி அதிமுக முன்னாள் துணை மேயர் பி.எ..மன்னன் பேரம் பேசியதற்கான ஆதாரங்களை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஆதாரங்களுடன் எம்எல்ஏ முஸ்தபா புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனை போலீசார் விசாரணை நடத்துவதாக செய்திகள் வெளியாகின்றன. சமீபத்தில் முஸ்தபா, ‘’த.வெ.க […]
ரெட்டி இல்லத் திருமணத்தில் விஜய் – த்ரிஷா. செம டிரெண்டிங்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் இல்லத் திருமண விழாவில் தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வர் விஜய்யுடன் நடிகை திரிஷாவும் கலந்து கொண்டது செம வைரலாகிவருகிறது. ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் ஒய்.எஸ். அனில் ரெட்டியின் மகள் ஷ்ரேயா ரெட்டியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு […]

