Share via:
பண்டிகை என்றாலே காய்கறிகளின் விலை ரொம்பவே எகிறிவிடும். இதனை
கட்டுப்படுத்தவும் தமிழக மக்களுக்கு தீபாவளி பரிசாகவும் தவெக அரசு சார்பில் 10 வகையான
காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்புக் காய்கறி தொகுப்பு’ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட
உள்ளது.
இதுதொடர்பில் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,
தீபாவளி பண்டிகையைப் பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அன்றாடச் சமையலுக்குத்
தேவையான காய்கறிகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில்,
10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ ஒன்று ரூ.100 என்ற
சலுகை விலையில், கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவுப் பண்டக
சாலைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 விற்பனை நிலையங்கள் மற்றும் சென்னையில் 4 நடமாடும்
காய்கறி கடைகள் விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒரு காய்கறித் தொகுப்பு ரூ.100 என்ற விலையில் மட்டுமே நுகர்வோருக்கு
விற்பனை செய்யப்பட வேண்டும். கூடுதலாகவோ குறைவாகவோ வசூலிக்கக்கூடாது என்றும் ஒரு நபருக்கு
ஒரு தொகுப்பு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தொகுப்பில் இடம்பெறும் 10 வகையான காய்கறிகளின் கொள்முதல்
விலை குழுவால் நிர்ணயிக்கப்படும். இதனுடன் ஒரு தொகுப்புக்கு ரூ. 2.50 என்ற அளவில் சுற்றுச்சூழலுக்கு
உகந்த பைக்கான செலவும் கணக்கிடப்பட்டுள்ளது.
பெரிய வெங்காயம் (500 கிராம்), தக்காளி (500 கிராம்), கத்தரிக்காய்
(250 கிராம்), உருளைக்கிழங்கு (250 கிராம்), கேரட் (200 கிராம்), பீன்ஸ் (200 கிராம்),
பச்சை மிளகாய் (100 கிராம்), எலுமிச்சை (100 கிராம்), இஞ்சி (50 கிராம்), தேங்காய்
(400-450 கிராம்) ஆகியவை இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ளன.
கொள்முதல் விலை, அரசால் நிர்ணயிக்கப்பட்ட ரூ.100 விற்பனை விலை,
விநியோகத் தொகை மற்றும் கூட்டுறவு கல்வி நிதிக்கான ரூ.2.50 ஆகியவற்றைக் கணக்கிட்டு
விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாஷ்

