Share via:
கடந்த அக்டோபர் மாதத்தில் நாடு தழுவிய ஜிஎஸ்டி வசூல் ரூ.2.3 லட்சம் கோடியைத் தாண்டி வரலாற்றுச் சாதனை படைத்திருக்கும் நிலையில், தமிழகத்தின் ஜிஎஸ்டி வளர்ச்சி 3%-ஆக முடங்கிக் கிடப்பது தமிழகத்திற்குப் பெரும் பின்னடைவு என்று எதிர்க்கட்சித்
தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.
இந்த நிலையில் இது வீழ்ச்சியல்ல, வளர்ச்சி என்று ஆதாரபூர்வமாக
பொருளாதார ஆய்வாளர்கள் கூறிவருகிரார்கள். இதுகுறித்து தவெகவினர், ‘’அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வருவாயில் தமிழ்நாடு “வெறும் 3% வளர்ச்சியுடன் பின்தங்கியுள்ளது” என்று கூறப்படும் கருத்து, தவறான புரிதலின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிறது.
அரைவேக்காடுகள் குறிப்பிடும் 3% என்பது ஜிஎஸ்டி போர்ட்டலில் வெளியிடப்படும் கிராஸ் ஜிஎஸ்டி கலெக்ஷன்
எனப்படும் மொத்த வசூல். இதில் தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் செலுத்தும் அனைத்து வரிகளும் அடங்கும். எனவே, மொத்த வசூல் எண்ணிக்கையை மட்டும் வைத்து மாநில அரசின் உண்மையான ஜிஎஸ்டி வருவாயை மதிப்பிட முடியாது.
உண்மையில் அக்டோபர் 2026-ல் தமிழ்நாட்டின் வருவாய் ரூ.7,460 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் ரூ.6,895 கோடியாக இருந்த வருவாய் தற்போது சுமார் 8% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதேபோல், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தின் வருவாய் ரூ.51,726 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 15% வளர்ச்சியாகும்.
நடப்பு நிதியாண்டின் ஏழு மாதங்களிலும் ஒவ்வொரு மாதமும் மாநிலத்தின் வருவாய் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. மேலும், 22.09.2025 முதல் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி 2.0 விகிதச் சீரமைப்பின் காரணமாகப் பல பொருட்களின் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
உற்பத்தித் துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் தமிழ்நாட்டின் கிராஸ் ஜிஎஸ்டி வசூலில் இதன் தாக்கம் இயல்பாகவே பிரதிபலிக்கும். இந்த அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல், புள்ளிவிவரங்களைத் திரித்துப் பேசி மக்களைத் திசைதிருப்ப முயற்சிக்கின்றனர்…’’ என்று குற்றம் சாட்டுகின்றனர்.
சரியான விளக்கம்.

