Share via:
நேற்றைய தினம் முதல்வர் விஜய் புதுக்கோட்டை பயணத்தில் எப்படியேனும்
முன்னிடத்தைப் பிடிக்கவேண்டும் என்று முயற்சி செய்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின்
திட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது. அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கியிருக்கும்
விஜயபாஸ்கருக்கு சீட் கொடுப்பதற்கு விஜய் தயாராக இல்லை என்று தெரிவிக்கிறார்கள்.
புதுக்கோட்டை விழாவிலும், ரோடு ஷோவிலும் விஜயபாஸ்கருக்கு முக்கியத்துவம்
கொடுக்கப்படவில்லை. விஜய்யின் இந்த நடவடிக்கை சரியென்று நிரூபிக்கும் வகையில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்காக, தம்பதியரில் ஒருவர் இந்த வெள்ளிக்கிழமை சென்னை மண்டல அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும், மற்றொருவர் அடுத்த வாரம் விசாரணைக்கு வர வேண்டும் என்றும் அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது விஜயபாஸ்கர் சொத்து சேர்த்ததாக, 2021-இல் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையின் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, கடந்த மார்ச் 21-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதற்கிடையே விஜயபாஸ்கர் மீது குட்கா வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு, பணமோசடி உள்பட வழக்குகள் இருப்பதால், நீதிமன்றத்தின் மூலம் தண்டனை ஒருவேளை கிடைத்தால் அடுத்து ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, விராலிமலை இடைத்தேர்தலில் சி.விஜயபாஸ்கருக்கு விஜய் வாய்ப்பு
கொடுக்க மாட்டார் என்கிறார்கள்.
ஊழலுக்கு இடமில்லை என்பதில் கறார் காட்டும் விஜய்க்கு மக்கள் ஜே
போடுகிறார்கள்.

