News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த குரியன் ஜோசப் தலைமையிலான குழுவின் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.  அனைத்து ஆவணங்களும் சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்க அரசு உத்தரவு. இந்த குழுவால் எந்த பயனும் இல்லை என்பதால் தமிழக அரசு அதிரடி உத்தரவு போட்டுள்ளது.

இந்த அரசாணைப்படி சட்ட ஆணையம் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.  கடந்த 7.8.2026-ன் படி, தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம் மறுசீரமைக்கப்பட்டது. இந்த சட்ட ஆணையத்திற்கு மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மத்திய – மாநில உறவுகள் தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்து பரிந்துரை வழங்குதல், தற்போதுள்ள சட்டங்களை மறுஆய்வு செய்தல் மற்றும் மாநிலத்தின் சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதிகள் மற்றும் ஒன்றிய – மாநில உறவுகளை பாதிக்கும் தற்போதைய சட்டங்கள் மற்றும் உத்தரவுகளை ஆய்வு செய்து, அரசுக்கு தகுந்த தீர்வுகளை பரிந்துரைக்க *ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த உயர்மட்டக் குழு என்பது சட்டப்பூர்வமான அமைப்பு அல்லாத  ஒரு குழு.

 இந்தக் குழுவின் பணிகளும், தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் பணிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதால், கவனமாக பரிசீலித்த பிறகு, உயர்மட்டக் குழுவின் சேவையை உடனடியாக நிறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

உயர்மட்டக் குழுவின் செயலாளர் மற்றும் குழு அதிகாரி, தங்களிடம் உள்ள அனைத்து பதிவுகள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை உடனடியாக தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும்  உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகளுக்கு இடையில் சிக்கலை உருவாகும் அமைப்புக்கு நிரந்தர பூட்டு போட்டிருக்கிறார் முதல்வர் விஜய். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link