Share via:
விஜய் அரசு பதவி ஏற்ற 6 மாத காலத்தில் கிட்டத்தட்ட மூவாயிரம் டெண்டர்
ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை எல்லாமே, திமுக காலத்தில் ஊழல்
நடைமுறையில் போடப்பட்ட டெண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை டெண்டர்களையும்
ரத்து செய்ததன் மூலம், தன்னுடைய ஆட்சியில் ஊழல் செய்ய விட மாட்டேன் என்பதை ஒரு முறை
அழுத்தமாகக் கூறியிருக்கிறார் முதல்வர் விஜய்.
தவெக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட சில முக்கியமான டெண்டர்களின்
பட்டியல் இது.
· ஓரகடம் – செய்யூர் 4 வழிச்சாலை, அண்ணா சாலை மேம்பாலம், போர்ட் – மதுரவாயல் பறக்கும் சாலை, ஹரூர், செஞ்சி, ஓசூர், சேலம் ரிங் ரோடு திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
· பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, குடிநீர் வழங்கல் துறையில் 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
· காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.16.83 லட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் டெண்டருக்கு 6 மணி நேரம் மட்டுமே அவகாசம் கொடுத்ததால் சர்ச்சை ஏற்பட்டு ரத்து.
· சென்னை, கோவை, மதுரைக்கு 500 மின்சார பஸ் வாங்கும் டெண்டர் மறு ஆய்வு.
· சென்னையில் ரூ.284 கோடி நடைபாதை திட்டம் மற்றும் 12 மாநகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை தனியார் மய டெண்டர் ரத்து.
· சென்னை மாநகராட்சியில் மட்டும் ரூ.700 கோடி மதிப்பிலான டெண்டர்கள் ரத்து.இதில் ரூ.310 கோடி வேளச்சேரி மேம்பாலம், ரூ.7 கோடி கொடுங்கையூர் மேம்பாலம் அடங்கும்.
இப்படி ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்பிலான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசு கடன் வாங்குவது முதல் 6 மாதத்தில் 21% குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, மோசடி ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கொடுக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அடித்துவிளையாடுகிறார் விஜய். இனிமேல், டெண்டர் நியாயமான முறையில்
விடப்பட்டு சரியான நடைமுறையில் செயல்படும்.

