News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் இல்லத் திருமண விழாவில் தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வர் விஜய்யுடன் நடிகை திரிஷாவும் கலந்து கொண்டது செம வைரலாகிவருகிறது.

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் ஒய்.எஸ். அனில் ரெட்டியின் மகள் ஷ்ரேயா ரெட்டியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் தொழிலதிபர் அதானி கலந்து கொண்டு மணமக்களான ஸ்ரேயா-உஜ்வல் பெலானியை வாழ்த்தினர்.

தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் ஒன்றாக இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். திருமண விழாவில் விஜய்யும் த்ரிஷாவும் ஒரே மேடையில் மணமக்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

விஜய் பழுப்பு நிற உடையிலும், த்ரிஷா இளஞ்சிவப்பு நிறப் புடவையிலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். இருவரும் ஒரே மேடையில் தோன்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அதானி மற்றும் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியுடனும் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற ஏஜிஎஸ் நிறுவனத்தின் கல்பாத்தி சுரேஷ் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் பங்கேற்றிருந்தனர். இந்த நிலையில், தற்போது மீண்டும் இருவரும் ஒரே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

விஜய் ஒளிவுமறைவு இல்லாமல் த்ரிஷாவை கூட்டி வருவதை தவெகவில் பலரும் வரவேற்கும் நிலையில், ஒருசிலர் மட்டும், ‘டைவர்ஸ் முடித்து சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க அண்ணா’ என்று அட்வைஸ் செய்கிறார்கள்.

விஜய் என்ன செய்தாலும் அது சோஷியல் மீடியா டிரெண்டிங்தான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link