News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

விஞ்ஞான மோசடிக்குப் பேர் போன திமுக ஏஐ மூலம் கோவை பெரியார் நூலகத்தில் நடந்திருக்கும் புத்தக மோசடி வெளியாகி தமிழகத்தையே கொதிக்க வைத்துள்ளது. நூல்கள் என்ற பெயரில் தரமற்ற குப்பைகளை மக்களின் வரிப்பணத்தில் வாங்கி, மாணவர்களையும் வாசகர்களையும் வாசிக்க வைத்த திருட்டுக் கும்பலின் ஊழல்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த வகையில் இப்போது மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடந்திருக்கும் ஒரு நூதன மோசடியும் வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்து தவெக ஐ.டி.விங், ‘’தமிழ்நாட்டை உலக அரங்கில் தலைகுனிய வைத்த பெருமை சித்தரஞ்சன் சாலை மூர்த்தியையே சேரும்! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பொருளாதார நிபுணர் ஜீன் டிரேஸ் பெயரில் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகத்தைத் தான் எழுதவில்லை என அவரே மறுத்திருக்கிறார்.

இந்தப் புத்தகக் கொள்முதல் முந்தைய அரசுக்குத் தெரியாமல் நடந்ததா? இத்தகைய புத்தகத்தைக் கொள்முதல் செய்ய அனுமதி அளித்தது யார்? இன்னும் எத்தனை நூலகங்களில் எத்தனைப் போலிப் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளனவோ? பார்த்துப் பார்த்து பெரியார் அறிவுலகத்தைச் செதுக்கியதாகப் பீற்றிக்கொண்ட சித்தரஞ்சன் சாலை மூர்த்தி, ஜீன் டிரேஸின் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.

கோயம்புத்தூர் பெரியார் நூலகத்தில் மட்டும் தான் ஊழல் என்று பேசுகிறார்கள். மதுரை கலைஞர் நூலகம் 4 லட்சம் புத்தகங்கள் எப்படி இருக்கிறது? கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல். பீனிக்ஸ் பதிப்பகத்தின் ஆயிரக்கணக்கான நூல்கள் . அவை அனைத்தும் ஆங்கில நூல்கள்.

ஆக, இன்னும் எத்தனையெத்தனை மோசடிகள் வெளிவரப்போகிறதோ..? தமிழகத்தை தலைகுனிய வைத்திருக்கிறார் ஸ்டாலின்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link