News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

நாளை காலை அத்தனை எம்.எல்.ஏக்களும் சென்னைக்கு வரவேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டம் பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு விஜய் சார்பில் அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நடக்கும் தவெக கூத்துக்களுக்கு முடிவு கட்டும் வகையில் கடும் எச்சரிக்கை விடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது, ஆட்டம் போடும் எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்களை அழைத்து கடுமையாக எச்சரிக்கை செய்வார். அதன்பிறகும் திருந்தாத நபர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும். அதே பாணியில் நாளை முதல்வர் அழைத்து கடுமையாக கண்டித்து எச்சரித்து அனுப்புவார் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக மூன்று பேர் மீது நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது.

1.   கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பினார் என்றும், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக ஆட்சியரின் வீட்டிற்கு மதுபோதையில் சென்று தகராறு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

2.   தடை செய்யப்பட்ட சீன ரக பட்டாசுகளை வெடித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா. கையில் வைத்து பட்டாசு வெடித்து தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.  

3.   துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகர்மான ரவிசங்கர் தொகுதி பிரச்சினையை பேச வந்த நபரை ஆபாசமாக பேசி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் ஊடகத்தில் வெளியாகியும் பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தை அணுகி துணை சபாநாயகர் மீது புகார் கொடுக்க முன் வந்தும் காவல்துறை புகாரை ஏற்க மறுத்துள்ளது.

இந்த மூன்று பேர் மீதும் நடவடிக்கை இருக்கும் என்று தவெக வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. அடோடு தவெக அரசின் மீது அடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை நவம்பர் 13 ஆம் தேதிக்கு மேல் கொண்டு வர வாய்ப்பு உண்டு. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்காக தவெக எம்.எல்.ஏக்களைத் தூக்க எதிர்க்கட்சிகள் திட்டம் போட்டு வருகின்றனர். அதனால் எம்.எல்.ஏக்களைச் சந்தித்து விஜய் ஆலோசனை செய்யவே அழைப்பு விடுத்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

உளவுத்துறை ஃபைல் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்கள் பற்றியும் கொடுத்த ரிப்போர்ட் விஜய் டேபிளில் இருக்கிறது என்றும் சொல்லப்படுவதால் அதிர்ந்து நிற்கிறார்கள். விஜய் வேட்டை ஆரம்பமாகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link